தமிழகத்தில் கொரோனா பரவல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்றிய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகள் தொடர்பான எழுத்து தேர்வுகள் அரசின் வழிகாட்டுதல் பின்பற்றி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமடைந்த நிலையில் கடுமையான கட்டுப்பாடுகள் மே 10 முதல் அமல்படுத்தப்பட்டன. அதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இருந்த போதிலும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஜூலை 12 வரை ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தற்போது ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் தற்போது வழங்கப்பட்ட தளர்வுகளில் கொரோனா பரவல் இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது. மேலும் புதுச்சேரிக்கு தமிழகத்திலிருந்து பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு தடை தொடர்ந்து நீடிக்கப்படுகிறது. மேலும் பல மாதங்களாக ஒன்றிய, மாநில அரசு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அவற்றை நடத்த தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இது குறித்த விபரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.