மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 5 பெரிய மாற்றங்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 10, 2021

Comments:0

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 5 பெரிய மாற்றங்கள்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு நிலுவையில் உள்ள நிலையில், டிஏ, டிஆர் மற்றும் பயணப்படி போன்றவை பற்றி அதிரடியாக 5 மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 7 வது ஊதியக்குழு:

மத்திய அரசின் 52 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சதிற்கும் மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு கடந்த 2020 ஜனவரி மாதம் முதல் 3 தவணைகளாக அவர்களின் சலுகைகள் அனைத்தும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் அனைத்தும் வரும் ஜூலை 1ம் தேதி முதல் ஊழியர்களுக்கு செலுத்தப்படும் என்று மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இந்நிலையில், டிஏ, டிஆர் மற்றும் மற்ற சலுகைகள் அனைத்தும் பற்றிய 5 மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


டி.ஏ., டி.ஆர் மறுசீரமைப்பு:

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர், ஏழாவது ஊதியக்குழு வழிகாட்டுதலின் படி, செப்டம்பர் முதல் டி.ஏ மற்றும் டி.ஆர் அதிகரித்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜே.சி.எம் தேசிய கவுன்சிலுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஹவுஸ் பில்டிங் அட்வான்ஸ்:

ஒரு மத்திய அரசு ஊழியர் தங்கள் சொந்த வீட்டைக் கட்டுவதற்கு ஹவுஸ் பில்டிங் அட்வான்ஸ் (எச்.பி.ஏ) இன் கீழ் 7.9 சதவீத எளிய வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. இந்த நன்மைகள் மார்ச் 31,2022 வரை கிடைக்கும்.


ஓய்வூதிய பயன்:

கோவிட் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, குடும்ப ஓய்வூதிய விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருந்தார். COVID-19 தொற்றுநோய்களின் போது ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை பல மாற்றங்களை செய்துள்ளது. இறப்புச் சான்றிதழ் கொடுத்து குடும்ப உறுப்பினர்களின் இறப்பினை பதிவு செய்து, நன்மைகளை அடையாளம். பயணப்படி:

டிஏ மற்றும் டிஆர் உயர்வுக்கு முன்னதாக, டிஏ சமர்ப்பிப்பதற்கான கால வரம்பை மத்திய அரசு முந்தைய 60 நாட்களில் இருந்து 180 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.


மெயில், எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் ஓய்வூதிய சீட்டு:

ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக, ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய சீட்டுகளை எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பதிவுசெய்த தொடர்பு விவரங்களில் வழங்குமாறு மத்திய அரசு வங்கிகளைக் கேட்டுள்ளது. இந்த முடிவு ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews