தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களது புகார்களை எவ்வித சிரமமும் இல்லாமல் தெரிவிக்கும் வகையில், புகார் பதிவேட்டு முறையை அறிமுகப்படுத்துவதாக அரசு உத்தரவிட்டுள்ளது.
புகார் பதிவேடு
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசு தரும் அத்தியாவசிய பொருட்கள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் குறித்த சில பிரச்சனைகள் அடிக்கடி எழுவது உண்டு. இவ்வகையான புகார்களை இணையவழி மூலம் அரசுக்கு தெரிவிக்க வழி வகுக்கப்பட்டுள்ளது. இந்த இணைய வழி புகார்களை அனுப்புவதில் பொது மக்களுக்கு சில சிக்கல்கள் இருப்பதால், நேரடி முறையில் புகார்களை தெரிவிக்க வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைள் எழுந்து வந்தது. மேலும் புகார்களை உடனடியாக தெரிவிக்கவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் புகார் அளிக்கும் நடைமுறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து ரேஷன் கடைகளில் புகார் அளிப்பது தொடர்பாக, புகார் பதிவேடு பதிவு முறையை அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் அளித்துள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களது புகார்களை இணையவழி மூலம் தெரிவிக்கும் நடைமுறையுடன், ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும் எழுத்து மூலம் புகார் அளிக்க புகார் பதிவேட்டு முறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.