இந்தியாவில் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் ஆண்டு தோறும் தங்கள் பள்ளி அங்கீகாரத்தை புதுப்பிப்பு செய்வார்கள். தற்போது இதற்கான கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ பள்ளிகள் :
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 23,000 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 68,00000 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றன. பள்ளிகள் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று மத்திய கல்வி வாரியத்தின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டு வருகின்றன. இக்கல்வி நிலையங்களில் ஆங்கில வழி கல்வி பயிற்று விக்கப்படுகிறது.
இதன் செயல்பாடுகள் மத்திய கல்வி குழுமத்தால் கண்காணிக்கப்படுகிறது. இந்த ஆங்கீகாரம் பெற்ற சி.பி.எஸ்.இ பள்ளிகள் ஆண்டு தோறும் உரிய ஆவணங்களுடன் புதுப்பிக்கப்பட வேண்டும். இதற்காக அனைத்து பள்ளிகளும் மத்திய கல்வி வாரியத்தில் உரிய ஆவணங்களை சமப்பித்து இனைய தளங்களில் தங்கள் பள்ளிகளை புதுப்பித்து கொள்வது வழக்கம். ஆண்டு தோறும் ஜனவரி முதல் பிப்ரவரி மாதங்களில் இதற்கான விண்ணப்பத்தை விண்ணப்பித்து உரிய ஆவணங்களுடன் புதுப்பித்து கொள்வர்.
ஆனால் இந்த வருடம் அதிக எண்ணிக்கையிலான பள்ளிகள் கொரோனா பரவல் காரணமாக புதுப்பிக்காமல் இருக்கின்றன. எனவே மத்திய கல்வி வாரியம் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஏப்ரல் 30 வரை நீட்டித்தது.
மேலும் இரண்டாம் கொரோனா வைரஸ் அலை இந்தியாவில் அதிகம் பரவும் காரணத்தினால் மத்திய கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 30 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆங்கீகாரம் பெற்ற சி.பி.எஸ்.இ பள்ளிகள் உரிய ஆவணங்களுடன் புதுப்பிப்பு செய்து கொள்ள வேண்டும் என மத்திய இடை நிலை கல்வி வாரியம் பள்ளிகளுக்கு அறியுறுத்தியுள்ளது.
Search This Blog
Wednesday, May 05, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.