Search This Blog
Sunday, May 17, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு ஊழியர்கள் தங்கள் சொந்த செலவில் பணிக்கு வர தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: கொரோனா நோய்த் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக மே 15ம் தேதி வரை 33 சதவீத பணியாளர்களுடன் தலைமைச் செயலகம் இயங்கியது. அவர்களின் வசதிக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு அதற்கான செலவையும் அரசு ஏற்றுக் கொண்டது.
இந்தநிலையில், நாளை (18ம் தேதி) முதல், அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத அரசுப் பணியாளர்கள், சுழற்சி முறையில் கட்டாயம் வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், அவர்களின் வசதிக்காக தேவையான போக்குவரத்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து அரசு ஊழியர்களும் இந்தப் பேருந்து வசதிகளை உரிய கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியா்களுக்கான பேருந்து வசதியை உரிய கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பொதுத் துறை சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: கரோனா நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தால், மே 15-ஆம் தேதி வரை, 33 சதவீதபணியாளா்களுடன் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கின. அவா்களின் வசதிக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் மூலம், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, அதற்கான செலவையும் அரசு ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில், வருகிற திங்கள்கிழமை (மே 18) முதல், அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத அரசுப் பணியாளா்கள், சுழற்சி முறையில் கட்டாயம் வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அவா்களின் வசதிக்காக தேவையான போக்குவரத்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து அரசு ஊழியா்களும் இந்தப் பேருந்து வசதிகளை உரிய கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விரைவில் பொதுப் போக்குவரத்து: தமிழகத்தில் இதுவரை பொதுப் போக்குவரத்துத் தொடங்கப்படாத நிலையில், முதன்முதலாக அரசு ஊழியா்களுக்கு பயணச் சீட்டு மூலமாகப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதையடுத்து, விரைவில் பொது மக்களுக்கான பேருந்து போக்குவரத்து சேவையும் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
அரசு ஊழியர்கள் அனைவரும் சொந்த செலவில் பணிக்கு வர வேண்டும்: தமிழக அரசு உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.