அரசுபள்ளி மாணவர்களுக்கு மட்டும் MBBS உள் ஒதுக்கீடு - நிபுணர் குழு ஆலோசனை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 22, 2020

2 Comments

அரசுபள்ளி மாணவர்களுக்கு மட்டும் MBBS உள் ஒதுக்கீடு - நிபுணர் குழு ஆலோசனை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, அரசு அமைத்துள்ள நிபுணர் குழு ஆய்வு நடத்தியது. தமிழக பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' நுழைவு தேர்வு எழுத வேண்டும். அதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும், உள் ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இது குறித்து, ஆய்வு செய்வதற்கு, உயர் நீதிமன்ற நீதிபதி, கலையரசன் தலைமையில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, ஏற்கனவே இரண்டு முறை கூடி ஆலோசனை நடத்தியது. நேற்று, மூன்றாம் முறையாக கூடியது.அப்போது, மாணவர்களின் பட்டியலை, பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர். ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்பட்ட பின், மருத்துவ கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக, நிபுணர் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அறிக்கையை இறுதி செய்யும் பணிகளில், நீதிபதி தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது. நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று, மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை தமிழகத்தில் ஒவ்வோா் ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. இதைத் தொடா்ந்து, அரசுப் பள்ளி மாணவா்களின் நலன் கருதி, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில் இதுகுறித்த ஓா் அறிவிப்பை வெளியிட்டாா்.
அதில், ‘அரசு, மாநகராட்சி, நகராட்சி, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலன் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு பிரத்யேக உள் ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்து இருக்கிறது. இதற்காக சிறப்பு சட்டம் இயற்ற வழிவகை செய்ய ஏதுவாக தேவைப்படும் அனைத்து விவரங்களையும் தொகுத்து அரசுக்கு வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஓா் ஆணையம் அமைக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தாா். அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் 7 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், கடந்த 15, 16-ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. அதில் குழு உறுப்பினா்களுடன் பள்ளிக்கல்வி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனா். நீட் தோ்வுக்கு முன்னும், பின்னும் மருத்துவப் படிப்பில் சோ்ந்த அரசுப்பள்ளி மாணவா்கள் எண்ணிக்கை விவரம், மாணவா்கள் பின்னடைவுக்கு காரணம் உள்பட விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இதுதவிர இந்தக் குழுவிற்கான அலுவல் பணிகளை மேற்கொள்ள சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி வளாகத்தில், ஓா் இடமும் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, வரும் 22-ஆம் தேதியில் இருந்து தினமும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, இந்த மாத இறுதிக்குள் அறிக்கையை இறுதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், வரும் கல்வியாண்டிலேயே இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வரும் எனவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

2 comments:

  1. இந்த உள்ஒதுக்கீடு தமிழ் வழியில் கல்வி பயிலக் கூடிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வழங்கப்படவேண்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் அருகாமையில் இல்லாத பட்சத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பல்வேறு ஏழை மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள் ஆகையால் தமிழ் வழியில் கல்வி பயிலக் கூடிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இந்த உள்ஒதுக்கீடு விரிவுபடுத்த ஆவண செய்ய வேண்டும் என வேண்டுகிறேன்

    ReplyDelete
  2. M.M. குணசேகரன், ஆசிரியர், தம்பு மேல்நிலைப்பள்ளி, கோயமுத்தூர்.
    உள் ஒதுக்கீட்டினை பரிசீலனை செய்யக்கூடிய நீதியரசர் குழுவிற்கு மாணவர்களின் சார்பாக ஒரு அன்பு வேண்டுகோள்... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் இல்லாத இடங்களிலும் மேலும் அரசு பள்ளிகள் செய்யக்கூடிய தமிழ் வழியில் கல்வி பயிலக் கூடிய அனைத்து மாணவர்களையும் உயர்த்தக்கூடிய சீரிய பணியினை அரசு உதவிபெறும் பள்ளிகளும் செய்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை தாங்கள் அறிந்ததே இந்த சூழ்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஏழை மாணவர்கள் தமிழ் வழியில் கல்வி பயில்கின்றனர் ஆகையினால் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய உள்ஒதுக்கீடு அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தமிழ் வழியில் பயிலக்கூடிய ஏழை மாணவர்களுக்கும் வழங்குவது அரசின் நோக்கம் 100% நிறைவேறுவதற்கு ஏதுவாக இருக்கும் மேலும் உண்மையான அனைத்து ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில் அமையும் ஆகையால் மாண்புமிகு நீதியரசர் மற்றும் குழுவினர் இக்கோரிக்கையினை அரசுக்கு பரிந்துரைக்க ஆவண செய்ய வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறேன்.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews