பிரதமர் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 16 லட்சம் பேர் பணிக்குத் தேர்வு: மத்திய அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 10, 2020

Comments:0

பிரதமர் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 16 லட்சம் பேர் பணிக்குத் தேர்வு: மத்திய அரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிரதமர் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 16.61 லட்சம் பேர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறையின் இணை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறும்போது, ''பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் (PMKVY 2.0) 2016 முதல் 2020 வரை ஏராளமான இளைஞர்கள் பயிற்சி பெற்றனர். அவர்களில் 16.61 லட்சம் பேர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் புள்ளிவிவரம் ஜனவரி 17, 2020 தேதி வரை பொருந்தும். கைவினைக் கலைஞர்கள் பயிற்சி திட்டத்தின் கீழ் அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. குறிப்பாக 137 இடங்களில் உள்ள 15 ஆயிரத்து 697 ஐடிஐக்களில் இதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் 34.30 லட்சம் காலி இடங்கள் இருந்தன'' என்று தெரிவித்தார். பிரதம மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், 60 லட்சம் இளைஞர்களுக்கு புதிதாக திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் அதிகாரபூர்வமற்ற இதர பயிற்சி பெற்று தகுதியான 40 லட்சம் பேருக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக மத்திய அரசு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews