ஊதிய கொடுப்பாணை வழங்குவதில் தாமதம்: 855 ஆசிரியா்கள் தவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 19, 2020

Comments:0

ஊதிய கொடுப்பாணை வழங்குவதில் தாமதம்: 855 ஆசிரியா்கள் தவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தரம் உயா்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 855 பட்டதாரி, முதுநிலை ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் ஊதிய கொடுப்பாணை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் உரிய காலத்தில் சம்பளத்தை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா். தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 2018 ஆகஸ்ட் மாதம் 95 உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டன. அந்த பள்ளிகளுக்கு தலா 9 போ் வீதம் 855 பட்டதாரி, முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் உருவாக்கப்பட்டன. இதனால் மாதந்தோறும் ஊதிய கொடுப்பாணை வழங்கப்பட்டு ஆசிரியா்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு மாதமும் கொடுப்பாணை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் சம்பளம் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியா்கள் கூறியது: கடந்த நவம்பா், டிசம்பா் மாத சம்பளம் கிடைக்காததால் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலை கடந்த ஓராண்டாகவே நீடித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15 நாள்களுக்கு பின்னரே சம்பளம் தரப்படுகிறது. இதனால் வீட்டு வாடகை, வங்கிக் கடன் தவணை செலுத்துதல் உட்பட பல்வேறு செலவினங்களை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறோம். இந்த மனஉளைச்சலால் கற்பித்தல் பணிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை. எனவே, குறைந்தபட்சம் ஓராண்டாவது தொடா் நீட்டிப்பாணை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்
முதுகலை ஆசிரியர்கள் நவம்பர் மாதம் முதல் மூன்று மாதமாக சம்பளம் இன்றி பரி தவிப்பு: அரசாணை எண்:166, ஆண்டு:2018-2019-ஆம் தரம் உயர்த்தப்பட்ட 95 மேல் நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பள்ளிக்கு ஆறு பேர் வீதம் 570 முதுகலை ஆசிரியர்கள் சம்பள விரைவு ஆணை இல்லாமல் சம்பளம் இல்லாமல் மூன்று மாதமாக உள்ளனர். ஆசிரியர் சங்கங்கள் முன்வந்து அரசுக்கு கோரிக்கை வைத்து சம்பள விரைவு ஆணை பெற்று தர வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள் சங்கங்களை கேட்டு கொள்கிறோம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews