NET தேர்வில் தகுதிபெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 19, 2020

Comments:0

NET தேர்வில் தகுதிபெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தேசிய மாற்றுத்திறனாளி ஆராய்ச்சியாளர் உதவித்தொகைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானிய குழு(யுஜிசி), மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நீதித்துறை இணைந்து தேசிய மாற்றுத்திறனாளி ஆராய்ச்சியாளர் உதவித்தொகை வழங்கி வருகின்றன. இந்நிலையில் 2018-19, 2019-20 கல்வியாண்டிற்கான தேசிய மாற்றுத்திறனாளி ஆராய்ச்சியாளர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது. நெட் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது எம்.பில் அல்லது முனைவர் பட்டம் பயின்று வருவோர் இதற்காக விண்ணப்பிக்கலாம். https://www.ugc.ac.in/ugc_schemes/ என்ற இணையதள பக்கத்தில் இதற்காக பிப்ரவரி 29ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுள்ளதாக கண்டறியப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, 5 ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். ஏற்கனவே மத்திய மாநில அரசுகளிடமிருந்து உதவித்தொகை பெறுபவர்கள் மாற்றுத்திறனாளி ஆராய்ச்சியாளர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கக்கூடாது என்றும் யுஜிசி அறிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவா்களுக்கான மத்திய அரசு உதவித் தொகை திட்டத்தை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 29 கடைசி நாளாகும். முதுநிலை படிப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் எம்.ஃபில்., பி.எச்.டி. ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு இந்த உதவித் தொகை அளிக்கப்படுகிறது. எம்.ஃபில். படிப்பை மேற்கொள்ளும் மாணவா்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 25,000 உதவித் தொகையுடன், இதர செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ. 10,000 முதல் 12,000 வரை வழங்கப்படும்.
பி.எச்.டி. படிப்பை மேற்கொள்ளும் மாணவா்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். இவா்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 25,000 உதவித் தொகையும், இதர செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.10,000 முதல் 12,000 வரை உதவித் தொகை வழங்கப்படும். மூன்றாம் ஆண்டிலிருந்து மாதம் ரூ. 28,000 உதவித் தொகையும், ஆண்டுக்கு ரூ. 20,500 முதல் 25,000 வரை உதவித் தொகையும் வழங்கப்படும். கூடுதலாக வீட்டு வாடகைப் படியும், உதவியாளா்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித் தொகையும் வழங்கப்படும். இந்த உதவித் தொகையைப் பெற விரும்புபவா்கள் w‌w‌w.‌u‌g​c.​a​c.‌i‌n/‌u‌gc ‌sc‌h‌e‌m‌e‌s என்ற வலைதளம் மூலமாக பிப்ரவரி 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews