தேசிய குற்ற ஆவணம் காப்பகம், 2018 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ள குற்றங்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில், விவசாயிகளை விட, வேலையின்மையால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் வேலையில்லாததால் 35 பேரும், சுயதொழில் செய்வோர் 36 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது ஒட்டுமொத்தமா வேலையில்லாததால் 12,936 பேரும், சுயதொழில் செய்வோர் 13,149 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
மாநிலங்கள் வாரியான தற்கொலை பட்டியல்:
மகாராஷ்டிரம் - 17,972
தமிழ்நாடு - 13,896
மேற்குவங்கம் - 13,225
மத்தியப் பிரதேசம் - 11,775
கர்நாடகம் - 11,561
மேற்கண்ட மாநிலங்களில் தான் நாட்டின் 50.9 சதவீதம் தற்கொலைகள் நடைபெற்றுள்ளது.
தற்கொலை செய்து கொண்டுள்ள 42,391 பெண்களில், 22,937 பேர் குடும்பத் தலைவிகள். 1,707 பேர் அரசு ஊழியர்கள், 8,246 பேர் தனியார் நிறுவன ஊழியர்கள், 2,022 பேர் பொதுத்துறை ஊழியர்கள், 10,159 பேர் மாணவர்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.