Breaking

Sunday, January 19, 2020

5,8ம் வகுப்பு தேர்வு மையங்களில் மாற்றம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வேறு பள்ளியில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்ற கல்வித்துறை முடிவை கைவிட வேண்டும்' என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது. இச்சங்க மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஒச்சுக்காளை வரவேற்றார். மாநில தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் மயில் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் ஐந்து, எட்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். இதை ரத்து செய்ய வேண்டும். மேலும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவரே பொதுத் தேர்வை அந்தந்த பள்ளி மையத்தில் எழுதுகின்றனர். ஆனால் ஐந்து, எட்டாம் வகுப்புக்கு தொலைவில் உள்ள வேறு பள்ளிகளில் மையங்கள் அமைப்பது என்ற முடிவு கண்டிக்கத்தக்கது. இதை கைவிட வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog