விண்டோஸ் 10 இயங்குதளத்தில் கெஸ்ட் யூசர் மற்றும் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் என இருவித யூசர் அக்கவுண்ட்கள் இருக்கின்றன. இதில் ஸ்டான்டர்டு யூசர் அக்கவுண்ட்டினை பயன்படுத்துவது எப்போதும் சிறப்பான ஒன்றாகும். சமயங்களில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் பயன்படுத்தும் போது, அவற்றை அழிக்கும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.
ஒருவேளை அப்படியாகும் பட்சத்தில் அழிக்கப்பட்ட அட்மின் அக்கவுண்ட்டினை ரிக்கவர் செய்வது எப்படி என்பதையும், ஸ்டான்டர்டு யூசர் அக்கவுண்ட்டை உருவாக்குவது மற்றும் புதிய அட்மின் அக்கவுண்ட்டை உருவாக்குவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
பில்ட் இன் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்
மைக்ரோசாஃப்ட் தளத்தில் பில்ட்-இன் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் விண்டோஸ் இல் இருக்கிறது. இதனை அழிக்க முடியாது. எனினும், இதனை தேடி, திறக்க முடியும். அதன்பின் கமாண்ட் பிராம்ப்ட்டை திறக்க வேண்டும். சர்ச் பகுதியில் ரன் என தேர்வு செய்தோ ரைட் க்ளிக் செய்தோ பில்ட்-இன் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதை கொண்டு ஏற்கனவே உள்ள ஸ்டான்டர்டு அக்கவுண்ட்டினை எடிட் செய்து பெயரை மாற்ற வழி செய்யும். இனி புதிய யூசர் அக்கவுண்ட்டினை அட்மினிஸ்ட்ரேட்டர் ரைட்ஸ் மூலம் உருவாக்கி கொள்ள முடியும். மேலும் பில்ட் இன் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் ஆப்ஷனை ஆஃப் செய்யவும் முடியும்.
ஸ்டார்ட் மெனுவில் லோக்கல் செக்யூரிட்டி பாலிசியை தேட வேண்டும். கமாண்ட் பிராம்ப்ட் வேலை செய்யாத பட்சத்தில், அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் ஸ்டேட்ஸ் எனேபிள் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவேளை எனேபிள் செய்யப்படவில்லை எனில், ஆப்ஷனை டபுள் க்ளிக் செய்து திறக்க வேண்டும். பின் செட்டிங் பகுதியில் எனேபிள் செய்யலாம்.
தி ஹேக் ஆஃப் ரெஜிஸ்ட்ரி
இந்த அம்சத்தை முயற்சிக்கும் முந், முதலில் எக்ஸ்டெர்னல் டிரைவில் உள்ள தரவுகள் அனைத்தையும் பேக்கப் செய்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். கம்ப்யூட்டரை ரீபூட் செய்து விண்டோஸ் 10 ரிக்கவரி என்விரான்மென்ட் ஆப்ஷனை திறக்க வேண்டும். மீண்டும் கமாண்ட் பிராம்ப்ட்டை திறந்து, Regedit என பதிவிட வேண்டும். ரெஜிஸ்ட்ரி எடிட்டரை டபுள் க்ளிக் செய்து திறக்க முடியும். இனி ஃபைல் மெனுவை தேர்வு செய்து ஹைவ் லோடு செய்து பெயரை மாற்றலாம். ஃபைல் நேமினை தேர்வு செய்ததும் ஃபைலை திறக்க வேண்டும். இனி ஃபோல்டர் ஸ்டிரக்ச்சர் சென்று FDWord ஃபைலினை க்ளிக் செய்து அதனை திறக்க வேண்டும். கம்ப்யூட்டரை ரிபூட் செய்து புதிய யூசரை அட்மின் ரைட்ஸ் ஆப்ஷனுடன் உருவாக்கி கொள்ளலாம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.