👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
புதூர் அரசு பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு விழா நடந்தது. மாணவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர். வீரவநல்லூர் அருகே புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ‘‘மறந்துபோன பாரம்பரிய விளையாட்டுகள்’’ என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டது. காவல்துறை மற்றும் சுற்றுவட்டார பள்ளிகள் சார்பில் நடந்த இவ்விளையாட்டு போட்டிக்கு வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பட்டதாரி ஆசிரியை சத்யா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக சேரன்மகாதேவி வட்டாரக் கல்வி அலுவலர் முருகன் கலந்துகொண்டு மாணவர்களிடையே பாரம்பரிய விளையாட்டுகளின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். விழாவையொட்டி மாணவர்களிடையே கபடி போட்டி, கோலி, கில்லி, தாயம், பல்லாங்குழி, முறுக்கு கடித்தல், குழை குழையா முந்திரிக்கா, காதில் பூச்சொல்லுதல், கண்ணாம்பூச்சி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
போட்டியில் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாடகபுரம், மலையான்குளம், மாதுடையார்குளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களும், செங்குளம் டிடீடிஏ துவக்கப்பள்ளி மாணவர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இதில் பாடகபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தார்ஷியஸ், மலையான்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் நம்பிராஜன், பட்டதாரி ஆசிரியைகள் முத்துகுமாரி, ஜெபசீலி, சுந்தரி, கமலாதேவி, மஞ்சு, மயோபதி காப்பகம் மருத்துவர் டேனியல் மற்றும் தன்னார்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
‘‘செல்போனுக்கு அடிமையாகாதீர்’’
இன்ஸ்பெக்டர் சாம்சன் பேசுகையில், பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு செல்போனில் கேம் விளையாட அனுமதிப்பதன் மூலம் அவர்கள் படிப்படியாக தனிமைப்படுத்தப்படுகின்றனர். காலப்போக்கில் விபரீதம் குறித்து அறியாத குழந்தைகள் தேவையற்ற வலைத்தளங்களுக்குள் சென்று தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். இளம் பாலியல் குற்றவாளிகள் உருவாக செல்போனே முதல் காரணமாக அமைகிறது. எனவே குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்து அவர்களை தனிமைப்படுத்துவதை தவிர்த்து நமது பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட சொல்லி கொடுப்பதன் மூலம் அவர்களது திறன் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும், என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.