Search This Blog
Friday, December 13, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ்களை தெளிவாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட, பல்வேறு பதவிகளுக்கான, குரூப் - 4 தேர்வு, செப்., 1ல் நடந்தது. இந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், 24 ஆயிரத்து, 260 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.அவர்கள் வரும், 18ம் தேதிக்கு முன், தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
இதுவரை, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். மீதமுள்ளவர்களும், விரைந்து சான்றிதழ்களை பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு முன் பதிவேற்றம் செய்யாவிட்டால், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பதிவேற்றம் செய்தவர்கள், தங்களின் நிரந்தர பதிவில், சான்றிதழ்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.
சான்றிதழ்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டியது, விண்ணப்பதாரர்களின் பொறுப்பு. சான்றிதழ்கள் தெளிவாக இல்லாவிட்டால், வரும், 18ம் தேதிக்குள், மீண்டும் தெளிவாக கிடைக்குமாறு பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் வரும் 18ம்தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி-4 ல் அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த செப்டம்பர் 1ம்தேதி முற்பகல் நடத்தப்பட்டது. இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் தற்காலிகமாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட 24260 விண்ணப்பதாரர்கள் வரும் 18ம்தேதிக்கு முன்னர் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதுநாள் வரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். எஞ்சியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சான்றிதழ்களை வரும் 18ம்தேதிக்கு முன்னர் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
சான்றிதழ் பதிவேற்றம் செய்த விண்ணப்பதாரர்கள், தங்களது நிரந்தரப் பதிவில், தாங்கள் பதிவேற்றம் செய்த சான்றிதழ்கள் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்த்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டாலும், சான்றிதழ்கள் சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டியது விண்ணப்பதாரரின் பொறுப்பாகும். சான்றிதழ் தவறாக பதிவேற்றம் செய்யப்படிருந்தாலோ, தெளிவாக இல்லாமல் இருந்தாலோ அல்லது பதிவேற்றம் செய்யப்படாமல் விடுபட்டிருந்தாலோ அவர்களது விண்ணப்பங்கள் தேர்வாணையத்தால் நிராகரிக்கப்படும். எனவே விண்ணப்பங்கள் முறையாக இல்லாவிட்டால் உடனடியாக இ-சேவை மையங்கள் மூலமாக மீண்டும் பதிவேற்றம் செய்யலாம்.சான்றிதழ்கள் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டது குறித்து பெறப்படும் மனுக்கள், கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
சான்றிதழ் பதிவில் தெளிவு வேண்டும்: TNPSC அறிவுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.