SBI அதிரடி..! சேமிப்புக் கணக்கு மற்றும் FD வட்டி குறைப்பு..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 08, 2019

Comments:0

SBI அதிரடி..! சேமிப்புக் கணக்கு மற்றும் FD வட்டி குறைப்பு..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இப்போது மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறது. தன் சேமிப்பு கணக்குகளில் டெபாசிட் செய்து வைத்திருக்கும் பணம் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் டெபாசிட் செய்து வைத்திருக்கும் பணத்துக்கு கொடுக்கும் வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறார்களாம். இந்த வட்டி குறைப்பினால் வங்கியில் இருந்து பனம் வெளியே வரும். பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்கள் துறை சார் வல்லுநர்கள்.
1 லட்சம் ரூபாய்க்குள்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, தன்னுடைய சேமிப்பு கணக்குகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்து வைத்திருக்கும் தொகைக்கு ஆண்டுக்கு 3.5 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதத்தை 3.25 சதவிகிதமாக குறைத்து இருக்கிறார்கள். இந்த சேமிபுக் கணக்கு வட்டி குறைப்பு வரும் 01 நவம்பர் 2019 முதல் நடைமுறைக்கு வருகிறதாம். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் மொத்தம் 28 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் பணமாக இருக்கிறது.
1 லட்சம் ரூபாய்க்கு மேல்
அதே போல சேமிப்பு கணக்குகளில், 1 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 3 சதவிகிதம் மட்டுமே வட்டி கொடுக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் எஸ்பிஐ தன் சேமிப்பு கணக்கு டெபாசிட்தாரர்களுக்கு (1 லட்சம் ரூபாய்க்கு மேல் மட்டும்) வழங்கும் வட்டியை ஆர்பிஐயின் ரெப்போ வட்டி உடன் இணைத்ததும் குறிப்பிட வேண்டி இருக்கிறது.
டெபாசிட் வட்டி அமல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் இருக்கும் சேமிப்புக் கணக்குகளுக்கு மட்டும் இன்றி எஸ்பிஐயில் இருக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கும் வட்டியை சுமார் 10 அடிப்படைப் புள்ளிகள் (0.10 சதவிகிதம்) குறைத்து இருக்கிறார்களாம். எஸ்பிஐ வங்கியில் போடும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு வரும் அக்டோபர் 10, 2019 வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறதாம்.
எம் சி எல் ஆர் குறைப்பு
இன்று எஸ்பிஐ வங்கி தன் எம் சி எல் ஆர் கடன் வட்டி விகிதங்களையும் 10 அடிப்படைப் புள்ளிகள் (0.10 %) குறைத்து இருக்கிறது. இந்த ஒரு நிதி ஆண்டில் 2019 - 20-ல் மொத்தம் 6 முறை எம் சி எல் ஆர் வட்டி விகிதத்தைக் குறைத்து இருக்கிறார்களாம். தற்போது எஸ்பிஐ வங்கியின் எம் சி எல் ஆர் 8.05 சதவிகிதமாக இருக்கிறது. இந்த கடன் வட்டி விகித குறைவும் வரும் 10 அக்டோபர் 2019-ல் இருந்து நடைமுறைக்கு வருகிறதாம்.
பொது மக்களுக்கான FD வட்டி
எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்).
SBI Fixed Deposit Interest rates
7 days to 45 days-4.50%
46 days to 179 days-5.50%
180 days to 210 days-5.80%
211 days to less than 1 year-5.8%
1 year to less than 2 year-6.4%
2 years to less than 3 years-6.25%
3 years to less than 5 years-6.25%
5 years and up to 10 years-6.25%
மூத்த குடிமக்களுக்கான FD வட்டி
மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்).
Senior Citizen SBI Fixed Deposit Interest rates
7 days to 45 days-5.00%
46 days to 179 days-6%
180 days to 210 days-6.3%
211 days to less than 1 year-6.3%
1 year to less than 2 year-6.9%
2 years to less than 3 years-6.75%
3 years to less than 5 years-6.75%
5 years and up to 10 years-6.75%
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews