👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது இந்திய வங்கிகள் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிக் கொண்டு இருக்கிறார். அதில், வங்கிகள் இணைப்பு மிகவும் முக்கியமான விஷயமாக பேசி இருக்கிறார்.
குறிப்பாக இந்தியாவில் 2017-ம் ஆண்டில் 27 வங்கிகளாக இருந்த வங்கிகள் அனைத்து முறையாக திட்டமிட்ட படி இணைக்கப்பட்டால் இந்தியாவில் இனி 12 பொதுத் துறை வங்கிகள் மட்டுமே இருக்கும் எனவும் சொல்லி பகீர் கிளப்பி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நீரவ் மோடி புகழ் பஞ்சாப் நேஷனல் பேங்க் உடன் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா இணைக்கப்பட இருக்கிறது. இந்த இணைப்புக்குப் பின் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கியாக உருவெடுக்கும்.
தென் இந்தியப் புகழ் கனரா வங்கி உடன் சிண்டிகேட் வங்கி இணைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். திட்டம் போட்ட படி இணைப்புகள் நடந்த பின் இந்திய பொதுத் துறை வங்கிகளிலேயே 4-வது பெரிய வங்கியாக இடம் பிடிக்கும்.
அதே போல யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உடன் ஆந்திரா பேங்க் மற்றும் கார்ப்பரேஷன் பேங்க் இணைக்க இருக்கிறார்கள். இந்த இணைப்புக்குப் பின் இந்திய பொதுத் துறை வங்கிகளிலேயே ஐந்தாவது பெரிய வங்கியாக வளம் வரும்.
மற்றும் ஒரு பெரிய தென் இந்திய வங்கியான இந்தியன் பேங்க் உடன் அலஹாபாத் வங்கி இணைக்கப்பட வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்த இணைப்புக்குப் பின் இந்திய பொதுத் துறை வங்கிகளிலேயே 7-வது பெரிய வங்கியாக உருவெடுக்கும்.
ஏற்கனவே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளுக்கான இணைப்புகள் முடிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
பேங்க் ஆஃப் இந்தியா, செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், யூகோ பேங்க், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க் போன்ற வங்கிகள் இந்த இணைப்புச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்து இருக்கிறார்கள்
பஞ்சாப் நேஷனல் வங்கி:
வங்கி ஊழல் புகழ் நீரவ் மோடி, மெகுல் சோக்ஸிக்கு எல்லாம் கடன் கொடுத்த பஞ்சாப் நேஷனல் பேங்க் உடன் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகள் இணைக்கப்பட இருக்கிறது. இந்த இணைப்புக்குப் பின் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கி என்கிற பெருமிதத்துடன் தன் வியாபாரத்தை பார்க்கத் தொடங்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா:
அதே போல யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உடன் ஆந்திரா பேங்க் மற்றும் கார்ப்பரேஷன் பேங்க் இணைக்க இருக்கிறார்கள். இந்த இணைப்புக்குப் பின் இந்திய பொதுத் துறை வங்கிகளிலேயே ஐந்தாவது பெரிய வங்கியாக வளம் வரும். மற்றும் ஒரு பெரிய தென் இந்திய வங்கியான இந்தியன் பேங்க் உடன் அலஹாபாத் வங்கி இணைக்கப்பட வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்த இணைப்புக்குப் பின் இந்திய பொதுத் துறை வங்கிகளிலேயே 7-வது பெரிய வங்கியாக உருவெடுக்கும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா:
ஏற்கனவே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளுக்கான இணைப்புகள் முடிந்து விட்டது குறிப்பிடத்தக்கது. பேங்க் ஆஃப் இந்தியா, செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், யூகோ பேங்க், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க் போன்ற வங்கிகள் இந்த இணைப்புச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்து இருக்கிறார்கள்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U