கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மட்டுமின்றி,
நகரப்பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களும், பஸ்சில் நெருக்கடியான பயணங்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பிட்ட நேர இடைவெளியில் மட்டுமே சில கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதனால், பஸ்களில் கூட்ட நெரிசலில் சிக்கித்தவிப்பதோடு, படிக்கட்டில் நின்று அபாயகரமான பயணங்களையும் செய்கின்றனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாகன வசதிகள் இல்லாததால், அந்தந்த நேரத்துக்கு வரும் பஸ்களை மட்டுமே நம்பியுள்ளனர். இதனால், வேறுவழியின்றி, படிக்கட்டு பயணங்களை மேற்கொள்கின்றனர்.
இருப்பினும், மாணவர்களின் பாதுகாப்பு முதன்மையாக இருப்பதால், ஆபத்தான பயணத்தை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டுமென, கல்வித்துறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மாலையில் பள்ளி முடியும் நேரத்தில், பஸ் பயணம் செய்யும் மாணவர்களை நேரடியாக கண்காணிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
Search This Blog
Thursday, September 20, 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.