தமிழக பள்ளி கல்வி துறையின், இலவச திட்டங்கள் மற்றும் நிர்வாக பணிகளுக்கு, மத்திய அரசு, 1,422 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதில், 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள, 3,003 பள்ளிகளுக்கு, நிதியுதவி ரத்து செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்துக்கும், மத்திய அரசு நிதி அளிக்கிறது.தமிழகத்திலும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கை மற்றும் அடிப்படை வசதிகளுக்கு, நிதி உதவி அளிக்கப்படுகிறது.அந்த வகையில், தமிழக அரசின் சார்பில், உள்கட்டமைப்பு வசதிகள், இலவச திட்டங்களுக்கு, 2,838 கோடி ரூபாய் நிதி, மத்திய அரசிடம் கேட்கப்பட்டது.இதில், தமிழக பள்ளிகளில் உள்ள மாணவர் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அடிப்படையில், 1,422 கோடி ரூபாய் நிதியை, முதற்கட்டமாக ஒதுக்கி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த நிதியை பயன்படுத்தி, 32 மாவட்டங்களிலும் மாதிரி பள்ளிகள் அமைப்பது, மாணவ -மாணவியருக்கு, இலவசகல்வி உபகரணங்கள் வழங்குவது, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற பணிகளை, தமிழக பள்ளி கல்வி துறை மேற்கொள்ள வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வி ஆண்டில், குறைந்தபட்சம், 15 மாணவர்களுக்கு அதிகம் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே, நிதி வழங்கப்படும்என, மத்திய அரசுஅறிவித்தது.அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள, 31 ஆயிரத்து, 266 தொடக்க, நடுநிலை பள்ளிகளில், 15 மாணவர்களுக்கு அதிகம் உள்ளதாக, 28 ஆயிரத்து, 263 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன.இந்த பள்ளிகளுக்கு மட்டும், மத்திய அரசின் நிதியை, தமிழக அரசு பெற்றுள்ளது. மீதமுள்ள, 3,003 பள்ளிகளுக்கு, நிதி உதவி ரத்து செய்யப்பட்டுள்ளது.-
Search This Blog
Friday, September 21, 2018
Comments:0
3,003 தமிழக பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி ரத்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.