School Morning Prayer Activities - 20.07.2018 ( Kaninikkalvi's Daily Updates... ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 20, 2018

Comments:0

School Morning Prayer Activities - 20.07.2018 ( Kaninikkalvi's Daily Updates... )



பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.

உரை : பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

பழமொழி :
A little stream will run a light mill
சிறு துரும்பும் பல் குத்த உதவும்

பொன்மொழி:
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே. - நியேட்சே .

இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :
1.நீர் வாயுக்குண்டுவைக் கண்டுபிடித்தவர்? எட்வர்ட் டெய்லர்
2.அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்? ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்

நீதிக்கதை :
நரியும் அதன் நிழலும்
(The Fox and His Shadow Story)

ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் பெரியதாக தெரிந்தது. நரிக்கு ஏக குஷி. "நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். அதுவும் இந்த காட்டின் ராஜாவாக உள்ள சிங்கத்தை விடவும் பெரியவனாக நான் உள்ளேன் என நினைத்துகொண்டே வேட்டைக்குச் சென்றது.

செல்லும் வழியில் நரி ஒரு சிங்கத்தை கண்டது. சிங்கமோ சற்று முன்னர் தான் ஒரு மானை வேட்டையாடி அதை உண்ட களைப்பில் மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தது. நரியும் தன்னுடைய நிழல் சிங்கதைவிடவும் பெரியதாக இருபதாக நினைத்துகொண்டு சிங்கம் வரும் வழியில் நடந்து சென்றது. சிங்கமும் நரியை ஒன்றும் செய்யாமல் கடந்து சென்றது.

நரிக்கோ ரொம்ப சந்தோஷம். நாம் சிங்கத்தை விடவும் பெரியதாக இருபதனால் சிங்கம் என்னைகண்டு பயந்து சென்றது என நினைத்துகொண்டு அன்று மாலை தன்னுடைய வீட்டிற்க்கு சென்றது. மாலை வீட்டிற்க்குச் சென்றதும் நரி காட்டில் உள்ள மிருகங்களை எல்லாம் அழைத்தது. அனைத்து மிருகங்களும் நரியின் கூட்டத்திற்கு வந்தன. நரி அனைத்து மிருகங்களிடமும், "இனிமேல் இந்த காட்டிற்கு நான் தான் ராஜா" என்றது.

யானையோ, “இதை நாங்கள் ஏற்க முடியாது என்றது. உடனே நரி காலையில் நடந்த சம்பவத்தைக் கூறி சிங்கமே என்னைக் பார்த்து பயந்து சென்றது” என்றது. கூட்டத்தில் இருந்த மானோ, “சிங்கத்தை உன் முன் மண்டியிடச் சொல் பிறகு உன்னை இந்த காட்டிற்கு ராஜவாக்குகிறோம்” என்றது. அடுத்த நாள் நரி அந்த சிங்கத்தை தேடிச் சென்றது. செல்லும் வழியில் சிங்கம் தன்னுடைய பாதையை நோக்கி வருவதை கண்டு நரி கர்வத்துடன் நின்றது. சிங்கம் வந்தவுடன் சிங்கத்தை பார்த்து, "என் முன்னாள் மண்டியிட்டுச் செல்" என்று நரி கூறியது. சிங்கமோ மிகவும் கோவம்கொண்டு தரக்குறைவாக பேசிய நரியை பார்த்து, "உன்னை மன்னித்து விடுகிறேன் உடனே இங்கிருந்து செல்" என்றது.
நரியோ சிங்கம் தன்னை கண்டு பயந்து விட்டது என நினைத்து “முடியாது” என்று பதில் கூறிக்கொண்டே தன்னுடைய நிழலைப் பார்த்தது. அது மதிய நேரம் என்பதால் நிழல் உண்மையான அளவில் இருந்தது. அபொழுது தான் நரிக்கு புரிந்தது சூரிய ஒளியில் தான் தனுடைய நிழல் பெரியதாக இருந்தது என்று. இதை பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கம் நரியை ஒரே அடியினால் கொன்றது.

நீதி: முட்டாள் தனமாக பெரிதாக யோசித்தால் அதற்கான இழப்பும் பெரிதாக இருக்கும்.

இன்றைய செய்தி துளிகள் :
1.சி.பி.எஸ்.இ. பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது: உயர்நீதிமன்றம் உத்தரவு
2.குரூப் 1 தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு
3.2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு
4.தமிழகம் முழுவதும் ஆர்டிஓ அலுவலகங்களில் லைசென்ஸ் பெற ‘ஹெச் டிராக்’ முறை
5.911 புள்ளிகள் பெற்று அசத்தல் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் கோஹ்லி தொடர்ந்து முதலிடம்

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews