சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி உரிமை சட்டப்படி அனைத்து சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகார சான்று பெற வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அரசின் ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் சி.பி.எஸ்.இ.,பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி மகாதேவன், அரசின் இந்த ஆணைக்கு கடந்த ஜூலை 10-ம் தேதி தடை விதித்திருந்தார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடு வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா அமர்வு விசாரித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை கட்டுப்படுத்தவும், ஆய்வு செய்யும் தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவித்துள்ளது. மேலும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையையும் நீக்கம் செய்துள்ளது.
Kaninikkalvi.blogspot.com
தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்த தனி நீதிபதி மகாதேவன் உத்தரவையும் தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. கல்வி கட்டணம் நிர்ணயம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தமிழக அரசு அதில் தலையிடாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.