நீட் தேர்வு கொண்டு வந்ததன் நோக்கமே தகுதி உள்ள மாணவர்களுக்கு மெடிக்கல் சீட் கிடைக்க வேண்டும் என்பதுதான். பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் எம்பிபிஎஸ் படிப்பதற்கு என ஒரு தகுதி வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டதுதான் நீட் தேர்வு. ஆனால் அந்த நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் பெற்று தகுதி இல்லாத மாணவர்களுக்கு மெடிக்கல் சீட் தரப்பட்டுள்ளது குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் சுமார் 400 மாணவர்கள் ஜீரோ உள்பட ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் ஆனால் அவர்களுக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மெடிக்கல் சீட் தரப்பட்டுள்ளதாகவும் முன்னணி ஆங்கில பத்திரிகை ஒன்று ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மெடிக்கல் சீட் பெற்றவர்களில் 1,990 மாணவர்கள் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு வெறும் 150 மதிப்பெண்கள் பெற்றவர்கள் என்ற உண்மையும் தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நீட் தேர்வு கொண்டு வந்ததன் நோக்கமே தகுதி உள்ள மாணவர்களுக்கு மெடிக்கல் சீட் கிடைக்க வேண்டும் என்பதுதான். பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் எம்பிபிஎஸ் படிப்பதற்கு என ஒரு தகுதி வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டதுதான் நீட் தேர்வு. ஆனால் அந்த நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் பெற்று தகுதி இல்லாத மாணவர்களுக்கு மெடிக்கல் சீட் தரப்பட்டுள்ளது குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் சுமார் 400 மாணவர்கள் ஜீரோ உள்பட ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் ஆனால் அவர்களுக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மெடிக்கல் சீட் தரப்பட்டுள்ளதாகவும் முன்னணி ஆங்கில பத்திரிகை ஒன்று ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மெடிக்கல் சீட் பெற்றவர்களில் 1,990 மாணவர்கள் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு வெறும் 150 மதிப்பெண்கள் பெற்றவர்கள் என்ற உண்மையும் தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.