சி.ஏ., படிப்புக்கான அடிப்படை, முதன்மை மற்றும் இறுதி தேர்வு முடிவுகள், வெளியிடப்பட்டுள்ளன.'சார்ட்டட் அக்கவுன்டன்ட்' என்ற, சி.ஏ., படிப்புக்கான தேர்வுகள், மே மாதம் நடத்தப்பட்டன. இதற்கான முடிவுகளை, இந்திய சார்ட்டட் அக்கவுன்டன்ட் அமைப்பான, ஐ.சி.ஏ.ஐ., நேற்று வெளியிட்டது.
இதில், சி.ஏ., இறுதி தேர்வில், பழைய முறை தேர்வு; புதிய முறை தேர்வு என, இரண்டு தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பழைய முறைப்படியான தேர்வில், 9.09 சதவீதம் பேரும், புதிய முறைப்படி நடந்த தேர்வில், 9.83 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இறுதி தேர்வுகளில், ஜெய்ப்பூர் மற்றும் சூரத் மாணவர்கள் முதலிடமும், அகமதாபாத், பெங்களூர் மாணவர்கள், இரண்டாமிடமும், சூரத் மாணவர்கள் மூன்றாம் இடமும் பெற்றனர். அதேபோல், அடிப்படை தேர்வு மற்றும் பொது திறன் தேர்வான, சி.பி.டி., ஆகியவற்றுக்கும், தேர்வு முடிவு வெளியானது. பொது திறன் தேர்வில், 28.06 சதவீதமும், அடிப்படை தேர்வில், 19.24 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பட்டய கணக்காளர் - சி.ஏ., பவுண்டேஷன் தேர்வில்,கோவை, வேடப்பட்டியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ், 400க்கு, 288 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில், 21வது ரேங்க் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.