தந்தையின் கடன் நிலுவையில் உள்ளதால் மகளுக்கு கல்விக்கடன் தர மறுப்பு தெரிவித்த விவகாரத்தில் தலைஞாயிறு எஸ்பிஐ வங்கி மேலாளர் ஜூலை 23ல் நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.தந்தை கடனை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறி மகளுக்கு கல்விக்கடன் மறுப்பு தொடர்பாக மேல் முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
நாகையைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி தீபிகாவின் மனுவில் தனது தந்தைக்கு எந்த வங்கியிலும் கடன் நிலுவையில் இல்லை என்றும் வங்கி நிர்வாகத்தின் தவறான பதிலை ஏற்று தனி நீதிபதி கடனை மறுத்து உத்தரவிட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்து கல்வி கடன் வழங்க உத்தரவிடவும் கோரப்பட்டிருந்தது.
தந்தையின் பெயருக்கு களங்கம் விளைவித்த பாரத ஸ்டேட் வங்கி 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடவும் கோரப்பட்டிருந்தது.
விசாரணையின் போது தீபிகாவின் தந்தை வங்கி கடன் பெற்ற ஆதாரம் உள்ளதாக வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆவணங்களை ஜூலை 16ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.இந்நிலையில் இந்த விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க என்னென்ன தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து கல்விக்கடன் பெற 60% மதிப்பெண் வேண்டும் என்பது எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பிய நிலையில், கல்விக்கடன் தர மறுப்பு தெரிவித்த விவகாரத்தில் தலைஞாயிறு எஸ்பிஐ வங்கி மேலாளர் ஜூலை 23ல் நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.