'தனியார் பள்ளிகள், சட்ட விதிகளின்படி செயல்படுவதை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்' - மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 29, 2018

Comments:0

'தனியார் பள்ளிகள், சட்ட விதிகளின்படி செயல்படுவதை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்' - மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர்!


'தனியார் பள்ளிகள், சட்ட விதிகளின்படி செயல்படுவதை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்' என, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர், கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை, குரோம்பேட்டை மற்றும் ஆலப்பாக்கத்தில், 'ஸ்ரீமதி சுந்தரவல்லி மெமோரியல் பள்ளி' செயல்படுகிறது. இப்பள்ளிகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, மாணவ, மாணவியர் படிக்கின்றனர். சில நாட்களுக்கு முன், மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு, பள்ளி சார்பில், கடிதம் அனுப்பப்பட்டது.அதில், 'வரும் கல்வி ஆண்டில், அனைத்து மாணவ, மாணவியரும், இரண்டு லட்சம் ரூபாய், வைப்புத் தொகை செலுத்த வேண்டும். பணம் செலுத்த விருப்பம் இல்லாதவர்கள், ஜூலை, 31க்குள் தெரிவிக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, பள்ளி தாளாளர் சந்தானம் உட்பட, நான்கு பேரை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, பள்ளியை மூடுவதாக, பள்ளி நிர்வாகம் அறிவித்தது. அதிகாரிகள், பள்ளி நிர்வாகத்தினருடன் பேசியதை தொடர்ந்து, மூடும் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.

இது தொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர், கண்ணப்பன் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட, தனியார் பள்ளிகள் அனைத்தும், சங்கம், அறக்கட்டளை, லாப நோக்கமில்லாத கம்பெனி சட்டங்களின் கீழ் நடத்தப்படுகின்றன. அவர்கள், வணிக ரீதியாக செயல்படுவது, அடிப்படை விதிகளுக்கு முரணானது.அனைத்து தனியார் பள்ளிகளும், மக்கள் சேவையை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். வியாபார நோக்கோடு செயல்படக் கூடாது.


மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தொகை, பள்ளிக்காக செலவிடப்பட வேண்டும். வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. கல்வி கட்டணக் குழு நிர்ணயித்துள்ள தொகையை மட்டும், வசூலிக்க வண்டும். நன்கொடை எதுவும், வசூலிக்கக் கூடாது.அதை மீறி வசூலித்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், பிற கல்வி அதிகாரிகளும், சட்ட விதிகளின்படி, தனியார் பள்ளிகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.பள்ளி நிர்வாகம், வணிக நோக்கில், பெற்றோரிடம் பணம் பறித்தாலோ, நிர்வாகம் தவறு செய்தாலோ, அந்தப் பள்ளிகளை நிர்வகிக்க, சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். 'பள்ளியை மூடி விடுவோம்' என, பள்ளி நிர்வாகங்கள் கூறுவது, வெற்று மிரட்டலாகும். அதை கண்டு, பயப்பட வேண்டியதில்லை. நினைத்த நேரத்தில், பள்ளிகளை மூட முடியாது என்பதை, பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews