தமிழகத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 17ஆம் தேதி துவங்குவதாக பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 3 பகுதிகளாக தேர்வுகள் நடந்து வருகிறது. இத்தேர்வு முறையானது, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வு என மூன்று விதமாக நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் அதிரடியாக அறிவித்து வருகிறது.
Kaninikkalvi.blogspot.com
இந்நிலையில் தற்போது, தமிழகத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டுத்தேர்வு தேர்வுகளை நடைபெறும் தேதிகளை பள்ளி கல்வி துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 17 ம் தேதி காலாண்டுத்தேர்வு தொடங்கி, செப்டம்பர் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையடுத்து, செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டுத்தேர்வு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் பள்ளிகள் அக்டோபர் 3 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.