வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 25,000 பேருக்கு 10 நாள் சம்பளம் கட் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 21, 2018

Comments:0

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 25,000 பேருக்கு 10 நாள் சம்பளம் கட்


தமிழகத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 25 ஆயிரம் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கு 10 நாள் சம்பளம் பிடித்தம் செய்ய ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையினருக்கு வழங்கப்படும் ஊதிய முரண்பாடுகள் நீக்குதல், புதிய ெபன்சன் திட்டத்தை ரத்து செய்தல் உட்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் கடந்த 3ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊரக வளர்ச்சித்துறை தொடர்பான அனைத்து அலுவலகப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.


இதற்கிடையில் சென்னையில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் 8 அம்ச கோரிக்கைகள் ஏற்று விரைவில் அரசாணை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. தமிழகம் முழுவதும் 10 நாட்கள் நடந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஊராட்சி செயலர்கள் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘ஊரக வளர்ச்சித்துறையினர் கடந்த 3ம் தேதி முதல் 12ம் தேதி வரையில் 10 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு, ‘நோ ஓர்க், நோ பே’, என்ற அடிப்படையில் 10 நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்ய, கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நகல் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் கருவூல அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews