Welfare Schemes for students: 20 J-directors in field work - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 27, 2018

Comments:0

Welfare Schemes for students: 20 J-directors in field work


அரசு பள்ளிகள் நிர்வாக பணி கண்காணிக்க 20 இணை இயக்குனர்களுக்கு பொறுப்பு:

அரசு பள்ளிகளின் நிர்வாக பணிகள், நலத்திட்டங்கள் போன்றவற்றை கண்காணிக்க, 20 இணை இயக்குனர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறையில், பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மாவட்ட வாரியாக, பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வி துறைக்கு, தனித்தனி அதிகாரிகள் பொறுப்பு வகித்தநிலை மாற்றப்பட்டு, அனைத்து வகை பள்ளி களுக்கும், மாவட்ட அளவில், ஒரே துறை அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர்.

Official Order - Click here

இதேபோல, மாணவர்கள் எண்ணிக்கையை டிஜிட்டலில் பதிவு செய்வது, நலத்திட்டங்களுக்கு மாணவர்கள் எண்ணிக்கையை சரியாக கணக்கிடுவது போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.



இவற்றை கண்காணிக்கும் விதமாக, மாவட்டவாரியாக, 20 இணை இயக்குனர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் பரிந்துரைப்படி, முதன்மை செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார். இணை இயக்குனர்கள், ஏற்கனவே வகிக்கும் பதவிகளுடன் சேர்த்து, மாவட்ட கண்காணிப்பு பொறுப்பை கூடுதலாக மேற்கொள்வர். யார் எங்கேமதுரை, தேனி - நாகராஜ முருகன்; திண்டுக்கல் - செல்வராஜ்; ராமநாதபுரம், விருதுநகர்-குமார்: சிவகங்கை, புதுக்கோட்டை - அமுதவல்லி;

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews