இசைத்துறையில் அனுபவமும், இசைக் கல்லூரிகளில் இளங்கலை பட்டம் பெற்று வாய்ப்புகளுக்காக காத்திருப்பவர்களுக்கு வாய்ப்பாக தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் இசைப் பள்ளிகளில் காலியாக உள்ள இசையாசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்கள் இடமிருந்து வரும் 20க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 23
பணி: இசையாசிரியர் (குரலிசை) - 04 பணி: இசையாசிரியர் (நாதசுரம்) - 02 பணி: இசையாசிரியர் (தவில்) - 04 பணி: இசையாசிரியர் (தேவாரம்) - 06 பணி: இசையாசிரியர் (பரதநாட்டியம்) - 02 பணி: இசையாசிரியர் (வயலின்) - 05
சம்பளம்: மாதம் ரூ. 35,300 - 1,12.400
பணியிடம்: சென்னை மற்றும் தமிழ்நாடு வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட இசைப் பிரவில் 5 ஆண்டு பணி அனுபவம் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட இசைக் கல்லூரிகளில் இளங்கலை படட்ம் அல்லது டிப்ளமோ முடித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை: artandculture.tn.gov.in இனையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளம்பத்தை தேர்வு செய்து அறிவிப்பை கவனமாக படித்து, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்தி, பூர்த்தி செய்து, சமீபத்திய புகைப்படம், தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
ஆணையர், கலை பண்பாட்டு இயக்கம், தமிழ்வளர்ச்சி வளாகம், 2-வது தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை - 600 008. இணையதளம்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.