அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிக்க, 1,874 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அண்ணா பல்கலையின் இணைப்பில், 50க்கும் மேற்பட்ட, 'ஆர்கிடெக்ட்' எனும், கட்டட வடிவமைப்பியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், அரசு ஒதுக்கீட்டில், 2,200 இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலையில் ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்புவோர், 'நாட்டா' என்ற, தேசிய ஆர்கிடெக்சர் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு, நாட்டா தேர்வின் தேர்ச்சிக்கு, குறைந்தபட்சமாக, 70 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஜூலை, 4ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. மொத்தம், 2,200 இடங்களுக்கு, 1,874 பேர் விண்ணப்பித்து உள்ளனர். கடந்த ஆண்டு, 1,719 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.