தமிழகத்தில், ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு, 100 கோடி ரூபாய் அளவுக்கு,வீட்டுக்கடன் வழங்க, கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில், ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு, நியாயமான விலையில், வீடுகள் மற்றும் மனைகள் கிடைப்பதற்காக, 733 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் துவக்கப்பட்டன. இதில், 688 சங்கங்கள், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத்துடன் இணைந்துள்ளன. இவற்றில், 28 சங்கங்கள் வாயிலாக, 2017- 18ல், 537 உறுப்பினர்களுக்கு, 30 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், தவணை தொகை வசூலிப்பது, 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் வாயிலாக, ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு, 100 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சங்கங்களின் செயல்பாடுகள் அடிப்படையில், அவற்றின் உறுப்பினர்கள் பலன் பெறுவர்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.