10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
பெற்றோர் தரப்பில் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை றே்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் பள்ளி முடிந்த பிறகு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கூடம் முடிந்த பிறகு எக்காரணத்தை முன்னிட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் எழுத்து மூலமாக பெற்றோரின் அனுமதி பெற்று சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்திக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றிக்கையை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி சிறப்பு வகுப்புகள் நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.