1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள் அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 27, 2018

Comments:0

1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள் அறிவிப்பு!



1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டு, தேர்வு விடுமுறை காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பதவியேற்ற பின்னர் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறார். அந்தவகையில் 10, 11 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில், பொதுத் தேர்வு தேதிகள் வகுப்புகள் தொடங்கிய அன்றே அறிவிக்கப்பட்டன.

அந்தவகையில் தற்போது 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி தேர்வு கால அட்டவணையும், 10-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு:
காலாண்டு தேர்வு- செப்டம்பர் 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை,
அரையாண்டு தேர்வு- டிசம்பர் 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை,
இறுதித் தேர்வு- ஏப்ரல் 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை.

9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை:
காலாண்டு தேர்வு- செப்டம்பர் 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை,
அரையாண்டு தேர்வு- டிசம்பர் 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை,
இறுதித் தேர்வு- ஏப்ரல் 8-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை (9-ம் வகுப்பு மட்டும்).

செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரையில் காலாண்டு விடுமுறை காலமாகவும், டிசம்பர் 23-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை காலமாகவும், ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை காலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews