மொபைலில் Active சிம் இல்லைனா WhatsApp இயங்காது - மத்திய அரச - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 02, 2025

Comments:0

மொபைலில் Active சிம் இல்லைனா WhatsApp இயங்காது - மத்திய அரச



சிம் இல்லைனா வாட்ஸ் அப் இயங்காது!

மொபைலில் Active சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ்அப் Account இயங்காது என்ற புதிய விதிமுறையை அமல்படுத்தியது மத்திய அரசு. இது டெலிகிராம், சிக்னல் செயலிகளுக்கும் பொருந்தும்.

மொபைலில் உள்ள சிம் கார்டு, அந்தந்த செயலிகளில் இணைக்கப்பட்டிருப்பதை 90 நாட்களுக்கு ஒரு முறை உறுதி செய்ய வேண்டும். அதேபோல Web-ல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே Logout ஆகும். இந்​தி​யா​வில் வாட்ஸ் அப், பேஸ்​புக், இன்​ஸ்​டாகி​ராம், டெலிகி​ராம், சிக்​னல், அரட்​டை, ஜியோ சேட், ஸ்னாப்​சேட், சேர் சாட் உள்​ளிட்ட பல சமூக வலை​தளங்​கள் பயன்​பாட்​டில் உள்​ளன. இந்த சமூக வலைதள செயலிகளை மொபைல்​போனில் பதி​விறக்​கம் செய்​யும் ​போது சிம் கார்டு அவசி​யம்.

இதன்​பிறகு சிம் கார்டை அகற்​றி​னாலோ அல்​லது சிம் கார்டு செயலிழந்​து​விட்​டாலோ கூட செயலிகள் தொடர்ந்து பயன்​பாட்​டில் இருக்​கும். சமூக வலைதள செயலிகளை பயன்​படுத்த இணைய வசதி மட்டும் போது​ம்

இதை பயன்​படுத்தி சைபர் குற்​றங்​கள் அதி​கரித்து வரு​கின்றன. இந்த சூழலில் மொபைல்​போனில் ஆக்​டிவ் சிம் கார்டு இருந்​தால் மட்​டுமே வாட்ஸ் அப் உள்​ளிட்ட செயலிகளை பயன்​படுத்த முடி​யும். சிம் கார்டு இல்​லை​யென்​றால் சமூகவலைதள செயலிகள் தானாகவே செயலிழந்​து ​விடும் என்று மத்​திய தொலைத்​தொடர்​புத் துறை புதிய விதி​களை அறி​வித்​துள்​ளது. கணினி மற்​றும் மடிக்​கணினி​யில் சமூக வலை​தளங்​களை ஒரு​முறை லாகின் செய்​து​விட்​டால் அந்த சமூக வலை​தளங்​களை தொடர்ந்து பயன்​படுத்த முடி​யும். புதிய விதி​களின்​படி 6 மணி நேரத்​துக்கு ஒரு​முறை சமூகவலை​தளங்​கள் தானாகவே லாக் அவுட் ஆகி​விடும். மீண்​டும் வழக்கம் போல் லாக் இன் செய்ய வேண்டும்.

இதுகுறித்து மத்​திய தொலைத்​தொடர்பு துறை வட்​டாரங்​கள் கூறும்போது,

‘‘சைபர் மோசடி கும்​பல்​கள் சிம் கார்டை பயன்​படுத்​தாமல் இணை​யத்தை மட்​டும் பயன்​படுத்தி வாட்ஸ் அப் காலில் பேசி மக்​களை ஏமாற்றி வரு​கின்​றன. இதனால் குற்றவாளிகளைப் பிடிப்பதில் போலீ​ஸாருக்கு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

தற்​போதைய சூழலில் வங்​கிச் சேவை சார்ந்த செயலிகளை பயன்​படுத்த சிம் கார்​டு​கள் கட்​டாய​மாக உள்​ளது. அதே நடை​முறையை சமூக வலை​தளங்​களுக்​கும் அமல்​படுத்த உள்​ளோம். மத்​திய அரசின் புதிய விதி​களை 90 நாட்​களுக்​குள் அமல்​படுத்த சம்பந்தப்பட்ட அனைத்து நிறு​வனங்​களுக்​கும் கண்​டிப்​புடன் உத்​தர​விடப்​பட்டு உள்​ளது’’ என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews