நாடு முழுவதும் இன்று முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 26, 2025

Comments:0

நாடு முழுவதும் இன்று முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு



பாதுகாப்பு மற்றும் சேவை மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே நாடு முழுவதும் ரயில் பயணக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

முக்கிய மாற்றங்கள்:

சாதாரண மற்றும் ஏசி வகுப்புகள்: சாதாரண இரண்டாம் வகுப்பு (Ordinary 2nd Class), தூங்கும் வசதி கொண்ட வகுப்புகள் (Sleeper Class) மற்றும் அனைத்து ஏசி வகுப்புகளின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

பயண தூரம்: குறுகிய தூர பயணங்களை விட நீண்ட தூர பயணங்களுக்கான கட்டண உயர்வு சற்று அதிகமாக இருக்கும்.

முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகள்: முன்பதிவு செய்யப்படாத சாதாரண டிக்கெட்டுகளின் விலையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய கட்டண விவரங்களை அறிய மற்றும் டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTC அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும். உங்கள் பயணத் திட்டங்களை வகுப்பதற்கு முன் NTES (National Train Enquiry System) மூலம் ரயில்களின் நேரத்தையும் தற்போதைய நிலையைச் சரிபார்க்கவும். நாடு முழுவதும் இன்று முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு

சென்னை: நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ள புதிய ரயில் கட்டண திருத்தம் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை அதிகரிப்பு, அன்றாட செலவுகள் என பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வரும் பொதுமக்களுக்கு இந்த கட்டண உயர்வு கூடுதல் சுமையாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமாக ரயில்வே நிர்வாகம் அமைந்துள்ளது. இந்த நிர்வாகத்தில் பல லட்சம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆனாலும், ஊழியர்களின் சம்பள செலவு தற்போது ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதைப்போன்று ஓய்வூதியச் செலவும் ரூ.60 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.

இதனால் 2024-25 நிதியாண்டில் மொத்த ரயில்வே செலவு இரண்டு லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தப் பெரிய செலவுகளைச் சமாளிக்கவே ரயில் கட்டணத்தில் சிறிய அளவிலான திருத்தம் செய்யப்பட்டுள்ளது என ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட கட்டண உயர்வின்படி 215 கிலோமீட்டர் வரை பயணிக்கும் பயணிகளுக்கு எந்த கட்டண உயர்வும் இல்லை. அதேபோன்று புறநகர் மின்சார ரயில்களின் கட்டணங்கள் மாற்றமின்றி தொடரும். ஆனால் நடுத்தர மற்றும் நீண்ட தூரப்பயணங்களில் சிறிய அளவிலான உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளிலும், ஏசி பெட்டிகளிலும் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 500 கிலோ மீட்டர் பயணம் செய்தால், முன்பு இருந்த கட்டணத்தை விட ரூ.10 கூடுதல் செலுத்த வேண்டியிருக்கும். முன்பதிவில்லாத பெட்டிகளில் 215 கிலோ மீட்டரைத் தாண்டிய பிறகு, ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் தூர அடிப்படையில் கட்டண உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews