யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாடு மாணவர்கள் அசத்தல்
தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 13.97% அதிகரித்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்ளிட்ட ஏராளமான போட்டித்தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி. எஸ்.சி. நடத்துகிறது.
இந்த நிலையில், 2025-ம் ஆண்டு யுபிஎஸ்சி பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
இதில் தமிழ்நாட்டில் இருந்து கடந்தாண்டு 136 பேர் பிரதானத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த
நிலையில், இந்தாண்டு 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 13.97% அதிகரித்துள்ளது. அதேவேளையில், 2024ல் மாநில
அரசின் பயிற்சி மையத்தில் பயின்றவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 48ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 85ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து இந்தாண்டு தேர்ச்சி அடைந்த மாணவர்களில், 54.84% பேர் மாநில அரசின் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள்.
இது கடந்தாண்டு 35.29% ஆக இருந்தது. 2025 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற யுபிஎஸ்சி பிரதானத் தேர்வில் நாடு முழுவதும் 2.736 பேர் தேர்வாகியுள்ள நிலையில், அவர்கள் அடுத்தக்கட்டமாக நேர்முகத்தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி பெற்ற 2,736 பேரில் 155 பேர் தமிழக மாணவர்கள்
Civil Services Mains Exam Results Released: Out of 2,736 who passed, 155 are from Tamil Nadu
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் 2,736 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 155 பேர் தமிழக மாணவர்கள் ஆவர்.
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஐஎஸ் உள்பட 23 விதமான மத்திய அரசின் உயர் பதவிகளுக்கான அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் வகையில் சிவில் சர்வீசஸ் தேர்வு என்ற அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இத்தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்துகிறது. இது, முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, ஆளுமைத் திறன் தேர்வு என 3 நிலைகளை உள்ளடக்கியது.
அந்த வகையில் சிவில் சர்வீஸ் பணிகளில் 979 காலியிடங்களை நிரப்புவதற்காக யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு கடந்த மே 25-ம் தேதி நடந்தது. இத்தேர்வை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 11-ம் தேதி வெளியிடப்பட்டன. முதல்நிலைத் தேர்வில் 14,161 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த ஆக. 22 முதல் 31 வரை சென்னை உள்பட நாடு முழுவதும் 24 முக்கிய நகரங்களில் நடந்தது.
இந்நிலையில், மெயின் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்தகட்ட தேர்வான ஆளுமைத் திறன் தேர்வுக்கு 2,736 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 155 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 87 பேர் தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுமைத் திறன் தேர்வு நடைபெறும் நாள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வு நடந்து முடிந்த பிறகு, மெயின் தேர்வு மதிப்பெண், ஆளுமைத் திறன் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன்பேரில் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் குருப்-ஏ, குருப்-பி பணிகளுக்கு தேர்வர்கள் ஒதுக்கீடு செய்யப்படுவர்கள்.
Search This Blog
Thursday, November 13, 2025
Comments:0
Home
All India Civil Services Coaching Centre
Anna University Semester Exam Results
COMBINED CIVIL SERVICES EXAMINATION
Exam Results
Civil Services Mains Exam Results வெளியீடு: தமிழ்நாடு மாணவர்கள் அசத்தல்
Civil Services Mains Exam Results வெளியீடு: தமிழ்நாடு மாணவர்கள் அசத்தல்
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.