TNPSC - குரூப் 5A தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
குரூப் 5A தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
செய்தி வெளியீட்டு எண். 135/2025
बी. 07.10.2025
செய்தி வெளியீடு
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி VA பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 2025 ஆண்டிற்கான ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டவாறு இன்று (07.10.2025) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 07.10.2025 முதல் 05.11.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு 21:12.2025 அன்று நடைபெறும். தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம்
தொடர்ச்சியாக 14வது முறையாக தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் தேர்விற்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் தவறாமல் வெளியிடப்பட்டுள்ளது.
2018 முதல் 2025 வரையுள்ள 8 ஆண்டுகளில் முதன் முறையாக தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் (2024 மற்றும் 2025), ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி VA பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - தொகுதி VA பணிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானதாகும். மேலும் அரசுத்துறைகளிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
Search This Blog
Thursday, October 09, 2025
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.