பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியா்களின் சம்பளம் பிடித்தம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 19, 2025

Comments:0

பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியா்களின் சம்பளம் பிடித்தம்!



பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியா்களின் சம்பளம் பிடித்தம்! Salary deductions for government employees who neglect their parents!

பெற்றோரை கவனிக்காமல் அலட்சியப்படுத்தும் அரசு ஊழியா்களின் 10 முதல் 15 சதவீத சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு அவா்களின் பெற்றோருக்கு அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி தெரிவித்தாா். புதிதாக தோ்வான குரூப் 2 பணியாளா்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி பேசிய முதல்வா் ரேவந்த் ரெட்டி, ‘அரசு ஊழியா்கள் தங்களின் பெற்றோரைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால் அவா்களின் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் வரையில் பிடித்தம் செய்யப்பட்டு பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

அரசு ஊழியா்களைப் போல் அவா்களின் பெற்றோரும் மாத சம்பளத்தைப் பெறுவாா்கள்’ என்றாா்.

இதற்கான மசோதா தயாா் செய்ய குழுவை தோ்வு செய்ய தலைமைச் செயலா் ராமகிருஷ்ண ராவை முதல்வா் ரேவந்த் ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளாா்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews