மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ‘ஜாலி போனிக்ஸ்’ 'Jolly Phonics' for school teachers to get students speaking English
கோவை, சித்தாபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 'ஜாலி போனிக்ஸ் ரெப்ரஷ்மென்ட் அண்ட் ஜாலி கிராமர்' என்ற பெயரில், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி நடந்தது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில், அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்க ளுக்கு, 'ஜாலி போனிக்ஸ் ரெப்ரஷ்மென்ட் அண்ட் ஜாலி கிராமர்' என்ற பெய ரில், சிறப்பு பயிற்சி சித்தா புதூர் மாநகராட்சி ஆரம் பப்பள்ளியில் நடக்கிறது.
மாநிலம் முழுவதும் உள்ள, அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழியை எளி தில் கற்றுக்கொடுக்கும் வகையில், ஆசிரியர்க ளுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் பேரூர், சூலூர், எஸ்.எஸ். குளம் உள்ளிட்ட 15 ஒன் றியங்களில் பணியாற்றும் துவக்கப்பள்ளி ஆசிரியர் களுக்கு, இந்த பயிற்சி இரண்டு கட்டங்களாக வழங்கப்படுகிறது.
ஒரு ஒன்றியத்திற்கு 5ஆசிரியர்கள் வீதம் மொத் தம் 75 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் பயிற்சியில், 40 ஆசிரியர்கள் பங்கேற்றனர். கருத்தாளர் கோமதி கூறு
கையில், "தனியார் பள்ளி களில் பயிலும் முன்பருவ நிலை மாணவர்கள், சரள மாக ஆங்கிலத்தில் உரை யாடுவது போல், அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கில மொழித் திறன்
களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக, 'போனிக்ஸ்' முறையில் மாணவர்களுக்குக் கற் றுத்தர, ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்ப டுகிறது," என்றார்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.