New 'Advisor' for Students: Why 54% of Students Trust ChatGPT, Gemini to Study Abroad? -
மாணவர்களின் புதிய 'அட்வைஸர்': வெளிநாட்டில் படிக்க 54% மாணவர்கள் சாட் ஜிபிடி, ஜெமினி-ஐ நம்புவது ஏன்?
வெளிநாடுகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களில் பாதிக்கும் அதிகமானோர், எந்தப் பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுப்பது, என்ன படிக்கலாம் என்று தீர்மானிக்க செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் உதவியை நாடத் தொடங்கியுள்ளனர். இந்தத் தகவல் ஐடிபி (IDP) நடத்திய 'எமர்ஜிங் ஃப்யூச்சர்ஸ்: வாய்ஸ் ஆஃப் தி இன்டர்நேஷனல் ஸ்டூடண்ட்' என்ற ஆய்வறிக்கையில் வெளியாகியுள்ளது.
சுமார் 8,000 தற்போதைய மற்றும் வருங்கால மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுக்க 54% பேரும், கல்வித் திட்டங்களைத் தேர்ந்தெடுக்க 53% பேரும் சாட் ஜிபிடி மற்றும் ஜெமினி (ChatGPT, Gemini) போன்ற AI தளங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு முறையே 35% மற்றும் 38% ஆக இருந்த நிலையில், ஒரே வருடத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த அதிரடி வளர்ச்சி, உயர்கல்வித் துறையில் ஏ.ஐ-இன் ஆழமான தாக்கத்தைக் காட்டுகிறது.
மனித வழிகாட்டுதலில் அசைக்க முடியாத நம்பிக்கை!
ஆரம்பக்கட்ட தேடலுக்கு ஏ.ஐ. ஒரு பிரபல 'ஸ்டார்டிங் பாயிண்ட்'டாக இருந்தாலும், இறுதியான முடிவுகளை எடுக்கும்போது மாணவர்கள் இன்னமும் மனித வழிகாட்டுதல் மற்றும் பாரம்பரியத் தகவல் மூலங்களையே பெரிதும் நம்புவதாக அமெரிக்கக் கல்வி ஆலோசனைக் குழு (EAB) 2025 மாணவர் தகவல் தொடர்பு விருப்பங்கள் ஆய்வு (Student Communication Preferences survey) தெரிவிக்கிறது.
நம்பகத்தன்மையின் நாயகர்கள் யார்?
ஏ.ஐ. கருவிகள் விரைவாகப் பரவி வந்தாலும், 'நம்பகத்தன்மை' என்று வரும்போது அவை பின்தங்கியே நிற்கின்றன. அமெரிக்கக் கல்வி ஆலோசனைக் குழு (EAB) ஆய்வின்படி:
நேரடி அனுபவங்கள் - அதாவது பல்கலைக்கழக வளாகச் சுற்றுப்பயணங்கள் (Campus Tours) மற்றும் கல்லூரிக் கண்காட்சிகளை (College Fairs) 34% மாணவர்கள் மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதுகின்றனர்.
அதிகாரபூர்வப் பல்கலைக்கழக வலைத்தளங்களை (Official University Websites) 30% பேர் நம்பியுள்ளனர்.
பள்ளி ஆசிரியர்கள், ஆலோசகர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் தனிப்பட்ட வழிகாட்டுதலில் 26% மாணவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர்.
ஆனால், AI சாட்போட்களை வெறும் 3% மாணவர்கள் மட்டுமே நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழகங்களின் பல்தள உத்தி!
மாணவர்கள் ஏ.ஐ-ஐ நாடினாலும், பல்கலைக்கழகங்கள் இன்னமும் பல்தளச் சந்தைப்படுத்துதலின் (Multi-channel marketing) மதிப்பை வலியுறுத்துகின்றன. அதாவது, வலைத்தளங்கள், நேரடிச் சந்திப்புகள், ஆலோசகர்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் எனப் பல வழிகளில் மாணவர்களைத் தொடர்புகொள்வது மிக அவசியம் என்று கல்வி நிறுவனங்கள் கருதுகின்றன.
ஏ.ஐ (AI) ஆரம்பக்கட்ட தகவல்களை அள்ளிக் கொடுத்தாலும், துல்லியமான விண்ணப்ப நடைமுறைகள், விசாச் சவால்கள் மற்றும் குழப்பமான விதிமுறைகளுக்கு, மனிதர்களின் நிபுணத்துவ வழிகாட்டுதலே இறுதி வரை தவிர்க்க முடியாதது என்பதை இந்த ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. உயர்கல்வித் துறையில் AI ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருந்தாலும், மனிதத் தொடர்பின் அணைப்பு இன்னும் வலுவாகவே உள்ளது!
Search This Blog
Sunday, October 19, 2025
Comments:0
Home
ChatGPT
Gemini
Student Malar
students news
மாணவர்களின் புதிய 'அட்வைஸர்': வெளிநாட்டில் படிக்க 54% மாணவர்கள் சாட் ஜிபிடி, ஜெமினி-ஐ நம்புவது ஏன்?
மாணவர்களின் புதிய 'அட்வைஸர்': வெளிநாட்டில் படிக்க 54% மாணவர்கள் சாட் ஜிபிடி, ஜெமினி-ஐ நம்புவது ஏன்?
Tags
# ChatGPT
# Gemini
# Student Malar
# students news
students news
Labels:
ChatGPT,
Gemini,
Student Malar,
students news
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.