நான்கு வயதில் தேசிய விருது..! கரவொலியால் அதிர்ந்த அரங்கம்! யார் இந்த த்ரிஷா தோசர்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 26, 2025

Comments:0

நான்கு வயதில் தேசிய விருது..! கரவொலியால் அதிர்ந்த அரங்கம்! யார் இந்த த்ரிஷா தோசர்?



நான்கு வயதில் தேசிய விருது..! கரவொலியால் அதிர்ந்த அரங்கம்! யார் இந்த த்ரிஷா தோசர்?

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நான்கு வயதே ஆன சிறுமி ஒருவர் தன்னுடைய முதல் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார். யார் அந்த சிறுமி என்பதைப் பற்றி பார்க்கலாம்..

தில்லியில் உள்ள விக்ஞான் பவனில் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று(செப்.23) நடைபெற்றது. தமிழகத்தின் சார்பில், சிறந்த படத்துக்காக பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை நடிகர் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோரும், வாத்தி பட பாடல்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் ஜி.வி. பிரகாஷுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அவர்களைத் தவிர்த்து ஹிந்தியில் நடிகர் ஷாருக் கான், மலையாளப் படத்துக்காக நடிகை ஊர்வசி உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் இருந்து சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், சிறந்த துணை நடிகர்கள் போன்ற பல பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. இதில், நான்கு வயது சிறுமி ஒருவர் தேசிய விருது பெற்றிருப்பது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வர்ணனையாளர் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது... ‘த்ரிஷா தோசர்' என அழைத்ததும் ‘க்யூட்டாக’ சேலை அணிந்துகொண்டு மேடைக்கு வந்த நான்கு வயதே ஆன அவர் மேடைக்கு வந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் விருதைப் பெற்றுக்கொண்டார்.

அவர் மேடையில் ஏறியதும் அந்த அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. அந்தச் சிறுமி விருது பெறும்போது ஷாருக் கான், ராணி முகர்ஜி உள்ளிட்டோரும் வியப்பாக பார்த்தனர். யார் இந்த த்ரிஷா தோசர்?

2023 ஆம் ஆண்டு சுதாகர் ரெட்டி இயக்கத்தில் பிரபல இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே நடிப்பில் மராத்திய படமாக ‘நாள் - 2’ வெளியானது.

கதையின் முக்கிய கதாபாத்திரமான சைதன்யா, நீண்ட நாள்களுக்குப் பின்னர், தன்னுடைய தாய், உடன் பிறப்புகளைச் சந்தித்தபின் நிகழும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருந்தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews