ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்க 30ம் தேதி கடைசி நாள்
யு.பி.எஸ்., எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை வருகிற 30ம் தேதிக்குள் தேர்வு செய்யு மாறு அரசு ஊழியர்களை நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல், மத்திய அரசு ஊழியர்களுக்கான என். பி.எஸ்., எனப்படும் தேசிய ஓய்வூதிய முறையில் இருந்து, யு.பி.எஸ்., திட்டத்தை தேர்ந்தெடுப் பதை, மத்திய அரசு விருப்ப திட்டமாக அறிமுகப்படுத்தியது. மேலும், தகுதி வாய்ந்த ஊழியர்கள் மற்றும் என். பி.எஸ்.,சின் கீழ் ஓய்வு பெற்றவர்கள், யு.பி.எஸ்., திட்டத்தை தேர்வு செய் வதற்கான கடைசி நாள் வருகிற 30ம் தேதியுடன் முடிவடைகிறது.
கடைசி நிமிட சிரமங் களை தவிர்க்கவும், பயனா ளர்களின் கோரிக்கைகளை சரியான நேரத்தில் செயல் படுத்துவதை உறுதி செய்ய வும், அனைத்து தகுதியுள்ள ஊழியர்களும் காலஅவ காசத்திற்கு முன்பே தங் கள் விருப்பத்தை தேர்ந் தெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
தற்போது என்.பி.எஸ்., சில் உள்ள பயனாளர்கள், காலக்கெடு முடிந்தபின் தெரிவித்துள்ளது. யு.பி.எஸ்., திட்டத்தை தேர்வு செய்ய முடியாது என அமைச்சகம் கடந்த ஜூலை 20ம் தேதி வரை கிட்டத்தட்ட 31,555 மத்திய அரசு ஊழியர்கள் யு.பி.எஸ்., திட்டத்தை தேர்ந்தெடுத்து உள்ளதாக புள்ளி விபரங் கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.