புதிய கற்பித்தல் முறைக்கு சான்றிதழ் வழங்க ஆசிரியர்கள் தேர்வு துவக்கம்
அரசு பள்ளி மாணவர்களிடம், தொழில்நுட்ப உதவியுடன் புதுமையான கற்பித்தல் முறையை பயன்படுத்தும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
தற்போது, பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் நவீன கல்வி சூழலை பின்பற்றி, மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், பல்வேறு புதிய கற்பித்தல் யுக்திகளை கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், 2025-2026ம் கல்வியாண்டு முதல், இவ்வகையான அர்ப்பணிப்பும், படைப்பாற்றலும் கொண்ட ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 380 ஆசிரியர்கள் வீதம், ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா, 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதுகுறித்து, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில்,
ஆசிரியர்களின் முந்தைய செயல்பாடுகள், அவர்கள் பயன்படுத்தும் கற்பித்தல் யுக்திகள் உள்ளிட்டவை முழுமையாக பரிசீலிக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில், ஆசிரியர்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன, என்றார்.
Search This Blog
Saturday, June 07, 2025
Comments:0
புதிய கற்பித்தல் முறைக்கு சான்றிதழ் வழங்க ஆசிரியர்கள் தேர்வு துவக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.