14,582 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான SSC CGL 2025 தேர்வு அறிவிப்பு வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 11, 2025

Comments:0

14,582 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான SSC CGL 2025 தேர்வு அறிவிப்பு வெளியீடு



14,582 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான SSC CGL 2025 தேர்வு அறிவிப்பு வெளியீடு

பட்டப்படிப்பு முடித்தவரா நீங்கள்? மத்திய அரசில் வேலைக்கு செல்ல வேண்டும் என விருப்பமுள்ளவரா? 2025-ம் ஆண்டில் உங்கள் கனவு நினைவாக சூப்பரான வாய்ப்பு அமைந்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வின் மூலம் நிரப்பும், மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) பட்டப்படிப்பு தகுதிக்கான CGL தேர்வு (SSC CGL 2025) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் உள்ள குரூப் சி மற்றும் பி பதவிகள் இந்தாண்டு நிரப்பப்படுகிறது.

பட்டப்படிப்பு முத்தவர்களுக்கு மத்திய அரசு துறைகளில் பணி செய்ய வாய்ப்பு இதோ. மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) பட்டத்தாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 14,582 காலிப்பணியிடங்கள் இந்தாண்டு நிரப்பப்பட உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக உடனே விண்ணப்பிக்க தொடங்கலாம். ஜூன் 9 முதல் தொடங்கப்பட்ட விண்ணப்பப்பதிவு வரும் ஜூலை 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு நிலை தேர்வு 2025 (SSC CGL 2025)

மத்திய அரசின் பல்வேறு துறைகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் உள்ள குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் இத்தேர்வின் மூலம் நிரப்ப உள்ளது.

வெளியுறவு துறை, உளவு துறை, ரயில்வே, தகவல் தொழில்நுட்ப துறை, வருவான வரித்துறை, சிபிஐ, தாபல் துறை, போதை மருந்து தடுப்புதுறை, வெளிநாட்டு வணிக துறை, என்ஐஏ, பாதுகாப்பு துறை உள்ளிட்டவற்றில் உள்ள உதவி அதிகாரி, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஆராய்ச்சி உதவியாளர், ஆடிட்டர், கணக்காளர், வரி உதவியாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது.

இந்தாண்டு தோராயமாக 14,582 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது.

வயது வரம்பு

SSC CGL 2025 தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 01.08.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். அதிகபடியாக பதவிக்கு ஏற்ப 27 முதல் 32 வரை இருக்கலாம்.

இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி

01.08.2025 தேதியின்படி, இப்பணியிடங்களுக்கான தேர்வை எழுத அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இளநிலை புள்ளியியல் அதிகாரி பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது 12-ம் வகுப்பு கணிதப் பாடத்துடன் கல்வி நிலையத்தில் படித்திருக்க வேண்டும் (அல்லது) புள்ளியியலில் பட்டப்படிப்பு அல்லது பட்டப்படிப்பில் ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.

புள்ளியியல் புலனாய்வாளர் தரம்-II பதவிக்கு பட்டப்படிப்பில் புள்ளியியல் ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். சம்பள விவரம்

CGL தேர்வு மூலம் நிரப்பப்படும் இப்பணியிடங்களில் குறைந்தபட்சம் நிலை - 4 கீழ் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளம் முதல் அதிகபடியாக நிலை 7 கீழ் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

SSC CGL தேர்வு இரண்டு கட்டமாக நடைபெறும். கணினி வழியில் Tier I & II என நடைபெறும். Tier I தேர்வு பொது அறிவு, நுண்ணிறிவு, ஆங்கிலம், பொது விழிப்புணர்வு ஆகியவற்றில் 100 கேள்விகளுடன் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

இத்தேர்வு கொள்குறி வகையில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடைபெறும். இதில் 0.50 நெகட்டிங் மார்க் உள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கு தகுதி அடைவார்கள். இத்தேர்வு 2 தாள்கள் கொண்டு ந்டைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் பொருட்டு இறுதி முடிவுகள் வெளியிடப்படும். இறுதி முடிவுகள் வெளியாவதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு அந்தந்த துறைகளில் நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆர்வமுள்ளவர்கள் https://ssc.gov.in/ என்ற இணையதளத்திலும், mySSC என்ற மொபைல் எண்ணிலும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். ஒரு முறை பதிவு செய்து, பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

இதற்கான முதல் கட்ட தேர்வு ஆகஸ்ட் 13 முதல் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, இரண்டாம் கட்ட தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews