பிஆர்க் படிப்புக்கான ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு
பிஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த கவுதம் கண்ணபிரான் உட்பட 3 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நம்நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவுகளாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ 2-ம்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஏப்ரல் 2 முதல் 9-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இதில் பி.ஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புகளுக்கான 2-ம் தாள் தேர்வு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 48,459 பேர் எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதையடுத்து மாணவர்கள் https://jeemain.nta.ac.in/ என்ற இணைய தளத்தில் சென்று தங்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இத்தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த கவுதம் கண்ணப்பிரான், கர்நாடகா மாணவர் பிரதம் அல்பேஷ் பிரஜாபதி, உத்தரகாண்ட் மாணவர் தருண் ராவத் ஆகியோர் தேசியளவில் முழு மதிப்பெண் (100 மதிப்பெண்) பெற்று சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
Search This Blog
Sunday, May 25, 2025
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.