அரசு உதவி பெறும் பள்ளி உபரி ஆசிரியர் பணிநிரவலில் இழுபறி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 26, 2025

Comments:0

அரசு உதவி பெறும் பள்ளி உபரி ஆசிரியர் பணிநிரவலில் இழுபறி

அரசு உதவி பெறும் பள்ளி உபரி ஆசிரியர் பணிநிரவலில் இழுபறி



தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி உபரி ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் மாற்று பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்வதில் இழுபறி நீடிப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழக அளவில் 37,211 அரசு பள்ளிகளில் 54.71 லட்சம், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 28.44 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆண்டு தோறும் அரசு உதவி பெறும் உயர், மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் பிற பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்வது வழக்கம்.

அவ்வகையில் இந்த ஆண்டும் அப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை பணியிட மாறுதல் செய்து அதற்கான விபரத்தை 'எமிஸ்' ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க சில நாட்களே உள்ள நிலையில் இப்பணியில் இழுபறி நீடிக்கிறது. இதில் பள்ளிக்கல்வித்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews