New change in Employees Provident Fund.. EPFO system - ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியில் ஏற்பட்ட புதிய மாற்றம்.. EPFO அமைப்பு
அனைத்து தரப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு EPF பங்களிப்புகள் செய்யப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு மாதமும், ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இருவரும் தங்கள் அடிப்படை மற்றும் அகவிலைப்படியில் 12% தொகையை EPF-க்கு பங்களிக்க வேண்டும். இந்நிலையில் நடப்பாண்டிற்கான PF வட்டி விகிதம் குறித்து அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இன் மத்திய அறங்காவலர் குழு இன்று (28-02-2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடப்பு நிதியாண்டிற்கான EPFO வட்டி விகிதம் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
அதன்படி “முந்தைய நிதியாண்டில் (2023-24), EPFO மூலம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 8.25% வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், 2024-25 நிதியாண்டிலும் அதே வட்டி விகிதம் தொடரும் என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது”
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.