அரசு பள்ளி ஆசிரியர்கள் வீடுகளுக்கு சென்று 'ஸ்பாட் அட்மிஷன்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 04, 2025

Comments:0

அரசு பள்ளி ஆசிரியர்கள் வீடுகளுக்கு சென்று 'ஸ்பாட் அட்மிஷன்'

36


அரசு பள்ளி ஆசிரியர்கள் வீடுகளுக்கு சென்று 'ஸ்பாட் அட்மிஷன்' Government school teachers visit homes for 'spot admission'

அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் துவக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகள் மார்ச் 1ம் தேதி துவங்க வேண்டும். ஊரக பகுதி அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்வியை நிறைவு செய்யும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர் விவரங்களை, 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகம் தெரிவித்தது. அதன்படி, மாவட்டம் வாரியாக மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கியுள்ளன. கடலுார் மாவட்டத்தில் கடலுார் மற்றும் விருத்தாசலம் என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. கடலுார் கல்வி மாவட்டத்தில் 736 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் துவக்கப் பள்ளிகள், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 680 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் என மொத்தம் 1,416 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் கடந்த 1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை துவங்கி நடந்து வருகிறது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி கூறுகையில், 'ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துக் கூறி ஸ்பாட் அட்மிஷன் செய்து மாணவர் சேர்க்கை பணியை துவங்கியுள்ளனர்' என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews