CUET நுழைவுத் தேர்வு மார்ச் 22-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 03, 2025

2 Comments

CUET நுழைவுத் தேர்வு மார்ச் 22-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும்

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20CUET%20%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%87%208-%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%20
மத்திய பல்கலை. சேர்க்கைக்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 8-ல் தொடக்கம்

மத்திய பல்கலைக்​கழகங்​களில் இளநிலை படிப்பு​களில் சேரு​வதற்கான க்யூட் தேர்வு கணினி வழியில் மே 8-ல் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக என்டிஏ அறிவித்​துள்ளது.

நாடு முழு​வதும் உள்ள மத்திய பல்கலைக்​கழகங்கள் மற்றும் அதன்​கீழ் இயங்​கும் கல்லூரி​களில் இளநிலை, முது​நிலை பட்டப்​படிப்பு​களில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்​வில் (க்யூட்) தேர்ச்சி பெறவேண்​டும். இந்த தேர்வை தேசிய தேர்​வுகள் முகமை (என்​டிஏ) ஆண்டு​தோறும் நடத்தி வருகிறது. அதன்​படி, அடுத்த கல்வி​யாண்​டில் (2025-26) இளநிலை படிப்பு​களுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு வரும் மே 8 முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடத்​தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்​ணப்ப பதிவு தற்போது தொடங்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்து விருப்​ப​முள்​ளவர்கள் https://cuet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக மார்ச் 22-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். விண்​ணப்ப கட்டணம் செலுத்த மார்ச் 23-ம் தேதி கடைசி நாளாகும். தொடர்ந்து விண்​ணப்​பங்​களில் மார்ச் 24, 25, 26-ம் தேதி​களில் திருத்​தங்கள் மேற்​கொள்​ளலாம். இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்​பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்​ளலாம். க்யூட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடத்​தப்பட உள்ளது.

நடப்​பாண்டு க்யூட் நுழைவுத் தேர்வு விதி​முறை​களில் பல்வேறு மாற்​றங்கள் செய்​யப்​பட்​டுள்ளன. அதன்​படி, மாணவர்கள் 12-ம் வகுப்​பில் எந்த பாடம் படித்​திருந்​தா​லும், விரும்பிய பாடத்​தில் தேர்வு எழுதலாம். அதேபோல், ஒருவர் அதிகபட்சம் 5 பாடங்கள் வரை விண்​ணப்​பிக்க வாய்ப்பு வழங்​கப்​படு​கிறது. மேலும், ஹால்​டிக்​கெட் வெளி​யீடு உட்பட கூடு​தல் ​விவரங்களை /www.nta.ac.in/ என்ற தளத்​தில் அறிய​லாம் என்று என்டிஏ தெரி​வித்​துள்​ளது. . The CUET (UG)2025 will be conducted in 13 Indian languages ie. English, Hindi, Assamese, Bengali, Gujarati, Kannada, Malayalam, Marathi, Odia, Punjabi, Tamil, Telugu, and Urdu. Candidates are requested to please check the Information Bulletin of CUET (UG) 2025 available on NTA website: https://cuet.nta.nic.in/ for UG Programmes, Scheme of Examination, Eligibility and other information.

5. Important Instructions:

Candidates can apply for CUET (UG) 2025 through the "Online" mode only on the website https://cuet.nta.nic.in/ The Application Form in any other mode will not be accepted.

ii. Only one application is to be submitted by a candidate. Under no circumstances, candidates will be allowed to fill more than one Application Form.

iii. Candidates must strictly follow the instructions given in the Information Bulletin. available on the website https://cuet.nta.nic.in/ Candidates not complying with the instructions shall be summarily disqualified.

ie. Candidates must ensure that the e-mail address and mobile number provided in the Online Application Form are their own or parents/guardians' only as all information/communication will be sent by NTA through e-mail on the registered e-mail address or SMS on the registered mobile number only.

6. In case, candidate faces difficulty in applying for CUET (UG) -2025, he/she may contact 011-40759000 or e-mail at cuet-ug@nta.ac.in, The candidates are also advised to visit the NTA website(s) https://nta.ac.in and https://cuet.nta.nic.in/ regularly for the latest updates regarding the exam.
CUET-entrance-exam-for-admission-to-Central-University-begins-on-May-8

2 comments:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84664365