இன்னும் 2 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு துறையில் 23 லட்சம் வேலைவாய்ப்புகள் -
23 lakh jobs in the field of artificial intelligence in the next 2 years
வரும் 2027-ம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் 23 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என பெய்ன் அண்ட் கம்பெனி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் சாய்கட் பானர்ஜி கூறுகையில், “ சர்வதேச ஏஐ திறன் மையமாக நிலைநிறுத்திக்கொள்ளும் தனித்துவமான வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2027-க்குள் ஏஐ துறையில் வேலைவாய்ப்பு 1.5-2 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் ஏஐ துறையில் திறன்மிகு பணியாளர்களுக்கான தேவை 23 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 10 லட்சம் பேருக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதிய திறன்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஏஐ துறையில் திறமையானவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. எனினும், இது தீர்க்க முடியாத பிரச்சினை அல்ல.
சர்வதேச அளவில் கடந்த 2019-லிருந்து ஆண்டுதோறும் ஏஐ தொடர்பான வேலைவாய்ப்புகள் 21 சதவீதம் அதிகரித்துள்ளன. இதன் வேகத்துக்கு ஏற்ப திறன்வாய்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்காததால் இந்த துறையில் இடைவெளி அதிகரித்து வருகிறது. அத்துடன் இது, உலகளவில் ஏஐ தொழில்நுட்பத்துக்கு மாறும் வேகத்தை குறைக்க காரணமாக மாறியுள்ளது.
அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏஐ பணியாளர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது" என்றார்.
Search This Blog
Sunday, March 16, 2025
Comments:0
Home
Artificial intelligence
JOB NEWS
இன்னும் 2 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு துறையில் 23 லட்சம் வேலைவாய்ப்புகள்
இன்னும் 2 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு துறையில் 23 லட்சம் வேலைவாய்ப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84661257
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.