“We are taking Rajinikanth's greetings to the students” - Minister Anbil Mahesh Lainchi! - “ரஜினிகாந்த்தின் வாழ்த்துகளை மாணவர்களிடம் கொண்டு செல்கிறோம்” - அமைச்சர் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி!
அமைச்சர் அன்பில் மகேஸ் - ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!
சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்தை அமைச்சர் அன்பில் மகேஸ் சந்தித்துப் பேசினார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அனுப்பப்படுகின்றனர். இந்தமுறை, மாணவர்கள் 52 பேர் மலேசியா அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களுடன் இணைந்துகொள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று சென்னை விமான நிலையத்திற்குச் சென்றார்.
அங்கு நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்த அன்பில் மகேஸ், அவருடன் பேசியது பற்றி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ’நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேர் மலேசியா சென்றுள்ள நிலையில், அவர்களுடன் இணைந்து கொள்வதற்காக விமான நிலையம் சென்றபோது சூப்பர் ஸ்டார் அவர்களைச் சந்தித்தோம்.
அப்போது "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அரசுப் பள்ளி மாணவர்களை பன்னாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்கின்றோம். அவ்வகையில் இது 8வது பயணம். தற்போது மலேசியா சென்றுள்ளார்கள் மாணவர்கள். கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் முதன்முறையாக விமானத்தில் பயணிக்கிறார்கள்" என மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டோம். தனது ஸ்டைலில் வாழ்த்துகள் தெரிவித்தார் ரஜினிகாந்த்.
"தங்களின் வாழ்த்துகளை மாணவர்களிடம் கொண்டு செல்கிறோம். அது அவர்களுக்கு ஊக்கமளிக்கும்" என தெரிவித்து விடை பெற்றோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.